Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்சமரசத்தில் முடிந்த சிவகார்த்திகேயன் - ஞானவேல் ராஜா பிரச்சினை..

    சமரசத்தில் முடிந்த சிவகார்த்திகேயன் – ஞானவேல் ராஜா பிரச்சினை..

    மிஸ்டர் லோக்கல் பட விவகாரம் சார்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணை சமரசத்தில் முடிந்தது. 

    சிவகார்த்திகேயன் என்ற பெயர் தற்போது தமிழ் திரையுலகின் வெற்றி நட்சத்திரங்களின் பெயர் பட்டியலில் உள்ளது. மெரினாவில் ஆரம்பித்த வெள்ளித்திரைப் பயணமானது இன்று வரை வெற்றிகரமாகவே தொடர்ந்து வருகிறது. அதே நேரம் சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தில் சில படங்கள் தோல்வியைத் தழுவியுள்ளன.

    அந்த சில திரைப்படங்களில் மிஸ்டர் லோக்கல் திரைப்படமும் ஒன்று. இப்படத்தை இயக்குனர், ராஜேஷ் அவர்கள் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். மேலும், இப்படத்தில் நயன்தாரா நாயகியாக இத்திரைப்படத்தில் நடித்திருந்தார். 

    முழுக்க முழுக்க காமெடியை மையமாக கொண்டு உருவான இத்திரைப்படமானது சொல்லும் அளவிற்கு வெற்றிபெறவில்லை. மேலும், இத்திரைப்படத்தில் நடித்ததற்காக எனக்கு முழு சம்பள பணத்தையும் வழங்கவில்லை என சிவகார்த்திகேயன் கடந்த ஆண்டு புகார் ஒன்றை அளித்தார். 

    மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதற்காக பேசப்பட்ட சம்பளத்தில் இருந்து இன்னமும் நான்கு கோடி தரவில்லை என்றும், அந்த சம்பளத்தை பெற்றுத்தருமாறும், மேலும் அந்த சம்பளத்திற்கான டிடிஎஸ் வருமானவரித்தொகையை பெற்றுத்தருமாறும் சிவகார்த்திகேயன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பு மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு வந்தபோது, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சார்பில் இரு தரப்புக்கும் சமரசம் ஏற்பட்டுவிட்டதாக தெரிவித்து, அதற்கான மனு அளிக்கப்பட்டது. இதன்மூலம் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்டு வழக்கு முடித்து வைக்கப்படவுள்ளது. 

    ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அஜித் வசனம் பேசிய சிவகார்த்திகேயன்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....