Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அஜித் வசனம் பேசிய சிவகார்த்திகேயன்..

    ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அஜித் வசனம் பேசிய சிவகார்த்திகேயன்..

    ஏ.ஆர்.முருகதாஸ் தன்னோட உதவி இயக்குநர்கள் கதையை தயாரிக்கிறது மகிழ்ச்சியாக இருக்கு என ‘ஆகஸ்ட் 16 1947’ இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியுள்ளார். 

    இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் கவுதம் கார்த்திக் நடித்துள்ள படம், ‘ஆகஸ்ட் 16 1947’. இப்படத்தை முருகதாஸிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பொன்குமார் இயக்கியுள்ளார். 

    ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். 

    இந்த விழாவில் அவர் பேசியதாவது; 

    இயக்குநர் பொன்குமார் ஒரு வலி நிறைந்த விஷயத்தை இந்தப் படத்தில் வைத்திருக்கிறார். அவரின் மெனக்கெடல் ஒவ்வொரு விஷயத்திலும் தெரிகிறது. 

    கல்யாணத்திற்கு பிறகு வாழ்க்கையில் பல மாற்றம் வரும். அதை பெரும்பாலும் ‘லக்’குன்னு சொல்வாங்க. ஆனா, அத கொஞ்சம் அழகா யோசித்துப் பார்த்தா அதைப் பொறுப்புன்னு சொல்லலாம். 

    நான் ஆர்த்தியை கல்யாணம் பண்ணின பிறகுதான் தனியா ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைச்சது. திருமணம்தான் வாழ்க்கையில பெரிய மாற்றங்களைக் கொண்டு வரும். கவுதம் கார்த்திக்கிற்கு அதன் ஆரம்பமா இதைப் பார்க்கிறேன்.

    பொதுவாகவே, ஏ.ஆர்.முருகதாஸ் படங்கள் எனக்குப் பிடிக்கும். அவரின் ‘ஏழாம் அறிவு’ இசை வெளியீட்டு விழாவில், திரைக்கு பின்னால் இருந்து வேலை பார்த்தேன். அவர் தயாரித்த ‘எங்கேயும் எப்போதும்’ இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கினேன். அதுமட்டுமில்லாமல் அவர் தயாரிப்பில் வெளியான ‘மான் கராத்தே’வில் ஹீரோவாக நடிச்சேன். இப்போது, அவர் தயாரிக்கும் பட விழாவுக்கு சிறப்பு விருந்தினரா வந்திருக்கிறேன். 

    ஒருத்தர் வளர்ந்தா சந்தோஷப்படுறவங்க நிறைய பேர் இருப்பாங்க. எப்படியாவது என் கூட இருக்கிறவன் வளர்ந்திடணும்னு ஆசைப்படுறவங்க ரொம்ப கம்மி. ‘வீரம்’ படத்துல அஜித் சார் சொல்ற டயலாக், ‘கூட இருக்கவனை நாம பாத்துக்கிட்டா, மேல இருக்கவன் நம்மளைப் பாத்துக்குவான்’. ஏ.ஆர்.முருகதாஸ் தன்னோட உதவி இயக்குநர்கள் கதையை தயாரிக்கிறது மகிழ்ச்சியாக இருக்கு. 

    இவ்வாறு சிவகார்த்திகேயன் பேசினார்.

    ‘ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையேல் எஃப்.ஐ.ஆர்’ – சாவர்க்கரின் பேரன் அதிரடி!

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....