Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமின் கட்டணம் செலுத்தாத காரணத்தினால் மூதாட்டியை அரை நிர்வாணமாக ஓட வைத்த மின்வாரிய ஊழியர்கள்

    மின் கட்டணம் செலுத்தாத காரணத்தினால் மூதாட்டியை அரை நிர்வாணமாக ஓட வைத்த மின்வாரிய ஊழியர்கள்

    மத்திய பிரதேச மாநிலத்தில் மின்சார கட்டணம் கட்டாத தலித் சமூகத்தை சேர்ந்த மூதாட்டியை அரை நிர்வாணமாக மின்வாரிய ஊழியர்கள் ஓட வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    மத்திய பிரதேச மாநிலம், சாகர் மாவட்டத்தில் 19 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் செலுத்தாத காரணத்தினால், மின்வாரிய ஊழியர்கள் மூதாட்டி ஒருவரை அரை நிர்வாணமாக ஓடச் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    மின் கட்டணம் செலுத்தாத காரணத்தினால் மூதாட்டியின் வீட்டுக்கு சென்ற மின்வாரிய ஊழியர்கள் அங்கிருந்த கட்டில் மற்றும் இரு சக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

    அப்போது மூதாட்டி, குளியறையில் இருந்துள்ளார். மின்வாரிய ஊழியர்கள் பொருட்களை பறிமுதல் செய்வதை அறிந்த மூதாட்டி அவர்களை தடுக்க முற்பட்டுள்ளார். அதை மீறியும் அவர்கள் பொருட்களை எடுத்துச் சென்றதால், மின்வாரிய ஊழியர்களை பின்தொடர்ந்த படியே சேலைகளை சுற்றிக் கொண்டு மூதாட்டியும் ஓடியுள்ளார். 

    இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி வைரலானதை அடுத்து, சம்பந்தப்பட்ட மின் வாரிய ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மாநில மின்சாரத்துறை அமைச்சர் பிரதுமான் சிங் தோமர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூதாட்டியிடம் பொருட்களை ஒப்படைத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.            

    மூதாட்டியின் மகனும் மருமகளும் தனித்து சென்றுவிட்டதால் தனியாக வசித்து வந்த நிலையில், அவரது வீட்டின் மின்சார இணைப்பு மருமகளின் பெயரில் இருந்ததால் மூதாட்டிக்கு இது தெரியாமல் இருந்துள்ளது. 

    தெற்கு அமெரிக்காவில் மனிதருக்கு பரவிய பறவைக் காய்ச்சல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....