Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்தெற்கு அமெரிக்காவில் மனிதருக்கு பரவிய பறவைக் காய்ச்சல்

    தெற்கு அமெரிக்காவில் மனிதருக்கு பரவிய பறவைக் காய்ச்சல்

    தெற்கு அமெரிக்க நாடான சிலி மாகாணத்தில் நபர் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    தெற்கு அமெரிக்க நாடான சிலி மாகாணத்தில் முதல் முறையாக 53 வயதுடைய நபர் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தக் காய்ச்சல் இதற்கு முன்பு பறவைகளுக்கு மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. 

    பறவைகளுக்கு மட்டுமே பரவி வந்த இந்தக் காய்ச்சல் தற்போது மனிதர் ஒருவருக்கும் பரவி இருப்பதால், தொற்று பரவலுக்கான காரணத்தை கண்டறிய சிலி அரசு தீவிரம் காட்டி வருகிறது. மேலும் தொற்று பாதிக்கப்பட்ட நபரிடம் தொடர்பில் இருந்த பிறரையும் அடையாளம் காணவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

    அதே சமயம் சிலி மாகாணத்தில் கடந்த வாரத்தில் தான் பறவைக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, கோழி ஏற்றுமதியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

    முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஈகுவடார் நாட்டைச் சேர்ந்த 9 வயது சிறுமிக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் ஆட்டோ ரேஸ்! கைது நடவடிக்கை எடுத்த காவல்துறை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....