Wednesday, March 27, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதென் ஆப்ரிக்காவில் இருந்து 2-வது கட்டமாக 12 சிறுத்தைப்புலிகள் வருகை

    தென் ஆப்ரிக்காவில் இருந்து 2-வது கட்டமாக 12 சிறுத்தைப்புலிகள் வருகை

    தென் ஆப்ரிக்காவில் இருந்து 2-வது கட்டமாக 12 சிறுத்தைப்புலிகள் குனோ தேசிய பூங்காவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. 

    பிரதமர் மோடியின் பிறந்தநாள் கடந்த ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி நமீபியாவிலிருந்து தனி விமானம் மூலமாக 8 சிறுத்தைகள் அழைத்து வரப்பட்டன. 

    அந்த 8 சிறுத்தைகளை மத்திய பிரதேச மாநிலம் குனோ தேசிய வன விலங்கு உயிரியல் பூங்காவில் பிரதமர் மோடி தன் பிறந்த நாளன்று திறந்து விட்டார். 

    நமது நாட்டில் முற்காலத்தில் வேட்டையாடி அழிந்து போன சிறுத்தை இனத்தை மீண்டும் உருவாக்க ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நமீபியாவிலிருந்து ஐந்து ஆண் சிறுத்தைகளும் 3 பெண் சிறுத்தை குட்டிகளும் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டன. 

    இந்நிலையில், தென் ஆப்பிரிக்க நாட்டில் இருந்து இந்தியாவுக்கு இரண்டாவது கட்டமாக 12 சிறுத்தைகள் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. இதையடுத்து இந்தியா-தென் ஆப்ரிக்கா இடையே கடந்த மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது. 

    இந்நிலையில் இன்று காலை சி-17 ரக விமானம் மூலமாக 12 சிறுத்தை புலிகள் குவாலிஅயர் விமானப்படை தளத்தில் தரை இறங்கியது. தற்போது கொண்டுவரப்பட்டுள்ள சிறுத்தைப்புலிகளில் 7 ஆண்களும் 5 பெண்களும் அடங்கும்.

    சாலையில் சென்ற கார் திடீரென எரிந்தது; புதுச்சேரியில் பரபரப்பு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....