Friday, March 24, 2023
மேலும்
    Homeவாழ்வியல்செல்லப்பிராணிகள்உலகின் ஆபத்தான 6 நாயினங்கள் : உரிமையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

    உலகின் ஆபத்தான 6 நாயினங்கள் : உரிமையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

    உலகின் மிகவும் ஆபத்தான 6 நாயினங்களின் குணாதிசயங்களைப் பற்றி பார்க்கலாம்.

    1. சைபீரியன் ஹஸ்கி 

    சைபீரியன் ஹஸ்கி வகை நாய்கள் வேலை செய்வதற்கு பழக்கப்படுத்தப்பட்ட நாய் இனங்கள் ஆகும். அதனால் தான் அவை பெரும்பாலும் மனிதர்களுடன் நெருங்கிப் பழகுவதில்லை. ஆனால், முறையான பழக்கப்படுத்துதல் மூலமாக அவற்றை சாந்தமாக்கலாம். ஆனால், முறையற்ற மற்றும் கொடூரமான பழக்கப்படுத்துதல் அவற்றை மூர்க்கத்தனமாக மாற்றும். 2005 முதல் 2007 வரையிலான கணக்கெடுப்பின் படி சைபீரியன் ஹஸ்கி வகை நாய்களால் 13 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. 

    5. புல்மாஸ்டிப்

    புல்மாஸ்டிப் வகை நாய்கள் அவற்றின் சுறுப்புக்கு பெயர் போனவை. இவை இயல்பாகவே அறிவான, நல்ல உடலமைப்பு மற்றும் சக்தி வாய்ந்த நாய்கள் ஆகும். இவற்றின் இயல்பான துறுதுறு குணத்துக்காக இவை பெரும்பாலும் பாதுகாப்புக்காகவே பயன்படுத்தப்படுகின்றன. முறையான பழக்கப்படுத்துதல் இல்லாத பட்சத்தில் இவை கொடூரமாக நடந்து கொள்ள வாய்ப்புள்ளது. 2005 முதல் 2007 வரையிலான கணக்கெடுப்பின் படி புல்மாஸ்டிப் நாயினங்களால் 14 உயிழப்புகள் ஏற்பட்டுள்ளது. 

    1. அமெரிக்கன் புல்

    அமெரிக்கன் புல் வகை நாய்கள் அபரிமிதமான சக்தி, திறமை மற்றும் தாக்கும் தன்மை கொண்ட நட்பாக பழகும் நாய்கள் ஆகும். முந்தைய காலங்களில் இவற்றின் சக்தியை கருத்தில் கொண்டு பண்ணைகளில் வேலை செய்ய பயன்படுத்தப்பட்டுள்ளன. 2005 முதல் 2007 வரையிலான கணக்கெடுப்பின் படி அமெரிக்கன் புல் வகை நாய்கள் 15 உயிரிழப்புகளுக்கு காரணமாக இருந்துள்ளன. 

    1. ஜெர்மன் ஷெப்பர்டு

    உலகெங்கும் உள்ள பல்வேறு போலீஸ் அமைப்புகளில் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த ஜெர்மன் ஷெப்பர்டு வகை நாய்களின் மற்றொரு பெயர் அல்சேஷன். நாய் இனங்களிலேயே மூன்றாவது அறிவாளி நாய் இந்த ஜெர்மன் ஷெப்பர்டு. இவை தாக்குதலில் ஈடுபடும் பொழுது 1060 நியூட்டன் என்ற அளவில் கடித்து தாக்கக்கூடியவை. 2005 முதல் 2007 வரையிலான கணக்கெடுப்பின் படி இவை 20 உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளன. 

    2. ராட்வீலர் 

    ராட்வீலர் வகை நாய்கள் குடும்பங்களில் வைத்து வளர்ப்பதற்கு உகந்தவை அல்ல. குறிப்பாக நாய்வளர்த்தலில் அனுபவம் இல்லாதவர்கள் வளர்ப்பதற்கு உகந்தவை அல்ல. இவற்றின் எளிதில் கோபமடையும் தன்மையே இதற்கு காரணம். கடந்த 13 ஆண்டுகளில் மட்டும் 45 உயிரிழப்புகளை ராட்வீலர் வகை நாய்கள் ஏற்படுத்தியுள்ளன. 

    1. அமெரிக்கன் பிட்புல் டெரியர்

    அமெரிக்கன் பிட்புல் டெரியர் வகை நாய்கள் தான் உலகின் பெரும்பாலான நாடுகளால் தடை செய்யப்பட்ட மிகவும் ஆக்ரோஷமான நாய் இனங்கள் ஆகும். பார்ப்பதற்கு நடுத்தர அளவில் இருக்கும் இவை மிகவும் புத்திசாலித்தனமான நாய் வகைகள் ஆகும். இவற்றின் வலிமையையும், தன்னம்பிக்கையுமே இவற்றின் குணாதிசயங்கள் ஆகும். இவற்றின் அறிவும் வேலையில் காட்டும் ஈடுபாடுமே இவற்றை மிகவும் பிரபலமாக வைத்துள்ளன. கடந்த 13 ஆண்டு காலத்தில் மட்டும்  284 உரியிழப்புகளை ஏற்படுத்தியுள்ளன என்பதில் இருந்து இவை எவ்வளவு ஆபத்தானவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    chennai metro station

    மெட்ரோ பயணிகளின் கவனத்திற்கு! வாகனங்களை நிறுத்த புதியமுறை

    மெட்ரோ இரயில்‌ நிலையங்களில்‌ உள்ள வாகன நிறுத்துமிடங்களில்‌ பயணிகள்‌ தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு பணம்‌ செலுத்துவதற்கு பதிலாக மெட்ரோ இரயில்‌ பயண அட்டை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்‌ என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  பணமில்லா...