Friday, March 24, 2023
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்குற்றங்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்க இதுதான் ஒரே வழி - கொதித்த அன்புமணி ராமதாஸ்!

    குற்றங்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்க இதுதான் ஒரே வழி – கொதித்த அன்புமணி ராமதாஸ்!

    தமிழகத்தை பொறுத்தமட்டில் மதுவினால் நிகழும் கொடூரங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. பல திருட்டுச் செயல்களுக்கும் அடித்தளமாக மது விளங்கி வருகிறது. தமிழகத்தின் பொதுமக்கள் மதுவினால் படும் அவதிகள் கொஞ்சம் நெஞ்சம் அல்ல!

    தூத்துக்குடி தாளமுத்து நகரில் குடிபோதையில் மனைவியுடன் ஏற்பட்ட மோதலில் 2 வயது குழந்தையை சுவற்றில் அடித்து கணவன் கொலை செய்த செய்தி தமிழகத்தையை உலுக்கி வருகிறது.

    இந்நிலையில், இந்நிகழ்வை கேள்விப்பட்டதும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்ததாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பும் பலமுறை மது ஒழிப்பு குறித்து பேசியுள்ள நிலையில் தற்போது, குடி மனிதனை கொடூரனாக்கும் என்பதற்கு இது தான் சிறந்த உதாரணம் ஆகும் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், அன்புமணி ராமதாஸ் அவர்கள், அனைத்துக் குற்றங்களுக்கும் பிறப்பிடமாக விளங்குவது “மது” தான் என்றும், கொலை, கொள்ளை உள்ளிட்ட அனைத்து குற்றங்களுக்கும் மது தான் மூல காரணமாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    மது வணிகம் தொடரும் வரை, மனித குலத்துக்கு எதிரான இத்தகைய கொடியக் குற்றங்களைத் தடுத்து நிறுத்த முடியாது என்றும் தனது சமூக வலைத்தள பதிவில் கொதித்துள்ளார்.

    குற்றங்கள் இல்லாத, அமைதியான தமிழகத்தை உருவாக்க மதுவிலக்கு தான் ஒரே வழி ஆகும். அதனால் தமிழ்நாட்டில் அனைத்து மதுக்கடைகளையும் மூடி முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.

    இதையும் படிங்க; பிரஷாந்த் கிஷோரை காங்கிரஸில் சேர்ப்பதில் பிரச்சினை : மூத்த தலைவர்கள் போர்க்கொடி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    chennai metro station

    மெட்ரோ பயணிகளின் கவனத்திற்கு! வாகனங்களை நிறுத்த புதியமுறை

    மெட்ரோ இரயில்‌ நிலையங்களில்‌ உள்ள வாகன நிறுத்துமிடங்களில்‌ பயணிகள்‌ தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு பணம்‌ செலுத்துவதற்கு பதிலாக மெட்ரோ இரயில்‌ பயண அட்டை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்‌ என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  பணமில்லா...