Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமதுரா கிருஷ்ண ஜென்ம பூமி உள்ள மசூதியை அகற்றக் கோரிய வழக்க; பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு!

    மதுரா கிருஷ்ண ஜென்ம பூமி உள்ள மசூதியை அகற்றக் கோரிய வழக்க; பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு!

    உத்தர பிரதேச மாநிலத்தின் ஆக்ரா நகருக்கு வடக்கே 50 கிமீ தொலைவில் அமைந்துள்ள நகரம் மதுரா. மதுராவை சுற்றியுள்ள கோகுலம், பிருந்தாவனம், கோவர்த்தனம் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு கிருஷ்ண ஜென்ம பூமியாக உத்தர பிரதேச அரசு அறிவித்தது.

    இந்நிலையில், இங்கு கிருஷ்ணர் பிறந்த இடம் என்று நம்பப்படும் ஷாஹி இத்கா மசூதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதை நிறுத்த உத்தரவிடக் கோரி, மதுரா நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட மாணவர்கள் குழு மனுத்தாக்கல் செய்துள்ளது.

    இதற்கு முன்பு தொடரப்பட்ட இந்த வழக்குகளை ஏற்க முடியாது என்று மதுராவில் உள்ள சிவில் கோர்ட்டு முன்பு தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. ‘1991 ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் கீழ், இவற்றை ஏற்க முடியாது என்று தெரிவித்து வழக்குகளை தள்ளுபடி செய்தது. இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தால், ஏராளமான பக்தர்கள் கோர்ட்டில் இதுபோன்ற பல்வேறு வழக்குகளை தாக்கல் செய்யலாம்.

    அப்போது இந்த உத்தரவை எதிர்த்து மனுதாரர்கள் மேல்முறையீடு செய்தனர். கிருஷ்ணரின் உண்மையான பிறந்த இடத்தில் வழிபாடு நடத்த தங்களுக்கு உரிமை உள்ளது என்று மனுதாரர்கள் கூறுகின்றனர்.

    ஒரு காலத்தில் கோவில் இருந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டது என்று மனுதாரர்களில் ஒருவரான வழக்கறிஞர் ஷைலேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

    இந்துக் கோவில் பகுதியில் உள்ள ஒரு கட்டமைப்பு கோவிலுக்கு நிகரானது, அது மசூதிக்கு தகுதியானதல்ல என்று அவர் கூறியுள்ளார்.

    வேறு எந்த மதத்தின் அடையாளமும் இல்லாத நிலத்தில் மசூதி கட்டப்பட வேண்டும் என்று குர்ஆனில் கூறப்பட்டுள்ளதாகவும், அந்த நிபந்தனையை மசூதி நிர்வாகம் பூர்த்தி செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

    இதனிடையே, வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதிக்குள் ஒரு சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான வழக்கு காரணமாக, மதுராவில் உள்ள ஷாஹி இத்கா மசூதி பகுதி உள்பட மதுரா மாவட்டம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு ஆக்ரா கூடுதல் காவல்துறை இயக்குநர் ராஜீவ் கிருஷ்ணா உத்தரவிட்டுள்ளார்.

    மாவட்டத்தின் அமைதியையும், நல்லிணக்கத்தையும் சீர்குலைப்பவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என ராஜீவ் கிருஷ்ணா அதிரடியாக எச்சரித்துள்ளார்

    ஆக்ரா மண்டலத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்தின் காவல்துறைத் தலைவர்களும் குற்றவாளிகளாக அடையாளம் காணப்படும் நபர்களை உன்னிப்பாகக் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றும், மதத்தின் பெயரால் அமைதியை சீர்குலைக்க யாரேனும் முயன்றால், அவர் உடனடியாக கைது செய்யப்படுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதேபோல் கிருஷ்ண ஜென்ம பூமி பகுதி பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளதாகவும், யாரும் கிருஷ்ண ஜென்ம பூமிக்குள் நுழைய முடியாது என்றும் ஏடிஜி தெரிவித்தார்.

    எஜமானருக்காக மலைச்சிங்கத்துடன் போராடிய வளர்ப்பு நாய்..!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....