Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுகால்பந்து உலகக் கோப்பை: மொராக்கோ செய்த வரலாற்று நிகழ்வு..

    கால்பந்து உலகக் கோப்பை: மொராக்கோ செய்த வரலாற்று நிகழ்வு..

    கால்பந்து உலகக் கோப்பை போட்டியில், ஸ்பெயின் அணியை வீழ்த்தி மொராக்கோ அணியானது காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. 

    கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தற்போது அடுத்தக் கட்டத்தை எட்டியுள்ளது. 16 அணிகள் மோதும் நாக்-அவுட் சுற்று எனும் இந்த கட்டம் விறுவிறுப்பான முறையில் நடைபெற்று வருகிறது. 

    இந்நிலையில், நேற்று இரவு 8.30 மணியளவில் நடைபெற்ற நாக்-அவுட் சுற்றில் மொராக்கோ மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின. ஸ்பெயின் அணியே இப்போட்டியில் வெற்றிபெறும் என்ற பேச்சு பலமாக எழுந்த நிலையில், அந்த பேச்சை சுக்குநூறாக்கி வெற்றிப் பெற்றது, மொராக்கோ.

    நேற்று ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை. இதனால், ஆட்டம் சமனில் இருந்தது. இதைத்தொடர்ந்து, கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது. 

    ஆனால், இதிலும் இரு அணிகளும் கோல்கள் அடிக்கவில்லை. இதையடுத்து பெனால்டி சூட் அவுட் முறை பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டு அம்முறை கடைபிடிக்கப்பட்டது. 

    இதில் மொராக்கோ வீரர்கள் முதல் 4 வாய்ப்புகளில் 3 முறை கோல் அடித்து அசத்தினர். அதேசமயம், ஸ்பெயின் வீரர்கள் முதல் 3 பெனால்டி வாய்ப்புகளை தவற விட்டனர். இதனால், மொராக்கோ 3-0 என்ற கணக்கில் வெற்றிப்பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் மொராக்கோ அணி காலிறுதிக்கு முன்னேறியது. மேலும், மொராக்கோ அணியானது கால்பந்து உலகக் கோப்பை வரலாற்றில் காலிறுதிக்கு முன்னேறுவது இதுவே முதல் முறையாகும். 

    வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி; தொடரை தக்கவைக்குமா இந்தியா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....