Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்புதுச்சேரிபுதுச்சேரி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்! விரைந்து வந்த பேரிடர் மீட்புக்குழு

    புதுச்சேரி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்! விரைந்து வந்த பேரிடர் மீட்புக்குழு

    புயல் மற்றும் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து புதுச்சேரி வந்தடைந்தது பேரிடர் மீட்புக்குழுவினர். புதுச்சேரி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    தென்மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 2 தினங்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மைய்யம் எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து கனமழையை எதிர்கொள்ள அரசு நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.

    இந்நிலையில் கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுவதால் புதுச்சேரி துறை முகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு பணிகளை மேற்கொள்ள 2 பேரிடர் மீட்பு குழுவினர் புதுச்சேரி வந்துள்ளனர். இதில் ஒன்று காரைக்காலுக்கு அனுப்பப்பட்டது. மற்றொன்று புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினரை மாவட்ட ஆட்சியர் வல்லவன் நேரில் வந்து பார்வையிட்டார்.

    அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் தயாராகும் படி கேட்டுக் கொண்டார்.தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் இன்று புதுச்சேரியில் உள்ள தாழ்வான பகுதிகள் மற்றும் ஆபத்துக்குரிய பகுதிகளை பார்வையிட உள்ளனர்.

    கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்து மாயமான மீனவர்! தேடுதல் பணி தீவிரம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....