Tuesday, May 7, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்கூட்ட நெரிசல் சிக்கி 120 பரிதாப பலி! ஹாலோவீன் கொண்டாட்டத்தின் போது நடந்த சோகம்

    கூட்ட நெரிசல் சிக்கி 120 பரிதாப பலி! ஹாலோவீன் கொண்டாட்டத்தின் போது நடந்த சோகம்

    தென் கொரியாவில் ஹாலோவீன் கொண்டாட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 120 க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். 

    தென்கொரியாவின் இடோவான் மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஹாலோவீன் என்கிற ‘பேய் திருவிழா’ அக்டோபர் மாத இறுதியில் கொண்டாடப்படும். இந்நிலையில் இந்த மாவட்டத்துக்கு அந்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் செல்வது வழக்கம். 

    கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக இந்த திருவிழாவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. 

    இந்நிலையில், இந்த ஆண்டு ஹாலோவீன் கொண்டாட்டம் நடைபெற்ற நிலையில் இதில், ஏராளமான பொதுமக்கள் விகாரமான வேடங்களை அணிந்து கலந்துகொண்டனர். 

    அப்போது, முன்னோக்கி தள்ளப்பட்ட பெரிய கூட்டத்தால் திடீரென அதிக கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் மூச்சு திணறி உயிரிழந்தோர் எண்ணிக்கை 120 க்கும் மேல் அதிகரித்துள்ளது. மேலும் 100 க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

    இந்த தகவல் அறிந்து வந்த 400 க்கும் மேற்பட்ட அவசரகால பணியாளர்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று சியோல் நகர மீட்பு படைத் தலைவர் தெரிவித்துள்ளார். 

    அடையாளம் தெரியாத பிரபலமான ஒருவர் அங்குள்ள மதுபான விடுதிக்கு வந்திருந்ததகாவும், இந்தத் தகவலை அறிந்து பலர் ,அங்கு செல்ல முற்பட்டபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகவும் அவ்வூர் ஊடகத்தில் தகவல் வெளியாகியது. 

    இந்தச் சம்பவம் குறித்து தென்கொரிய அதிபர் யூன் சூக் யோல் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

    இதையும் படிங்க: புளூ டிக் குறியீட்டை பறிக்க புதிய யுக்தி ..! ஆட் குறைப்பு..! எலான் மஸ்கின் அதிரடி…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....