Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்வர்த்தகம்புளூ டிக் குறியீட்டை பறிக்க புதிய யுக்தி ..! ஆட் குறைப்பு..! எலான் மஸ்கின் அதிரடி...

    புளூ டிக் குறியீட்டை பறிக்க புதிய யுக்தி ..! ஆட் குறைப்பு..! எலான் மஸ்கின் அதிரடி…

    ட்விட்டரில் ஆட்குறைப்பு மற்றும் ப்ளு டிக்கிற்கான கட்டண உயர்வு போன்றவற்றை எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த சில மாதங்களாகவே நீடித்து வந்த ட்விட்டர் ஓப்பந்த பிரச்சினை ஓய்ந்து, எலான் மஸ்க் அதிகாரப்பூர்வமாக ட்விட்டரை தன் வசப்படுத்தியுள்ளார். தனது  அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தின் பயோவில் சீஃப் ட்விட் (Chief Twit) என்று மாற்றம் செய்துள்ளார். எங்கே என்ற இடத்தில் ட்விட்டர் தலைமை அலுவலகம்  (Twitter HQ) எனப் பதிவிட்டு தலைமையகத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

    மேலும், எலான் மஸ்க் ட்விட்டரை தன் வசப்படுத்தியதும் ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓவும், இந்தியருமான பராக் அக்ரவால், தலைமை நிதித்துறை அதிகாரி நேத் சேகல், சட்டம் மற்றும் திட்டத்துறை தலைமை அதிகாரி விஜயா கட்டே மற்றும் முக்கிய உயர் அதிகாரிகளை பணியில் இருந்து அதிரடியாக நீக்கினார். 

    இதுமட்டுமல்லாது, இனி ட்விட்டரில் பல்வேறு மாறுபாடுகள் நிகழும் என தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில், ட்விட்டரில் வேலை பார்க்கும் பணியாளர்களின் எண்ணிக்கையை 75 சதவீதம் அளவிற்கு குறைக்க திட்டம் திட்டியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    இதையும் படிங்க: இனி ஆட்டம் ஆரம்பம்! தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை? வானிலை மையம் தகவல்

    தற்போது ட்விட்டர் நிறுவனத்தில் சுமார் 7500 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த எண்ணிக்கையானது சுமார் 2000-மாக குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் ட்விட்டரின் வருவாயை இரட்டிப்பாக்கும் முயற்சியில் எலான் மஸ்க் ஈடுபடவுள்ளார். அவற்றின் ஒரு படியே இந்த ஆட்குறைப்பு என கூறப்படுகிறது.

    அத்துடன், ட்விட்டரில் அதிகார கணக்கு என்பதற்கான ப்ளு டிக்கிற்கு மாதந்தோறும் ரூ.1600 வசூலிக்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இந்த அறிவிப்பு வெளியான 90 நாட்களுக்குள் புளூ டிக் குறியீட்டிற்கான கட்டண தொகையை செலுத்தவில்லை என்றால் பயனாளர்கள் பெயருக்கு அருகில் உள்ள அந்த நீலநிற புளூ டிக் குறியீடு எடுக்கப்பட்டுவிடும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

    பலர் ப்ளு டிக் உபயோகித்து வரும் நிலையில் அவற்றை குறைப்பதற்காகவே இந்த முன்னெடுப்பு என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். முன்னதாக, ப்ளு டிக்கிற்கு மாதம் ரூ.400 மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....