Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமோர்பி பால விபத்து; தாமாக முன்வந்து அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்

    மோர்பி பால விபத்து; தாமாக முன்வந்து அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்

    குஜராத் பால விபத்து தொடர்பாக பதிலளிக்க மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    குஜராத் மாநிலம் மோர்பி நகரில் உள்ள பாலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் -30) மக்கள் கூட்டம் அலை மோதியது. தீபாவளி பண்டிகை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகளவில் மக்கள் பாலத்துக்கு வந்திருந்தனர். அப்போது பொதுமக்களின் எடையைத் தாங்க முடியாமல், அந்தப் பாலம் மாலை 6.30 மணியளவில் அறுந்து விபத்து ஏற்பட்டது. பாலத்தில் இருந்தவர்கள் நதியில் விழுந்தனர். 

    இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 135-ஆக அதிகரித்த நிலையில், சுமார் 170 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும், விபத்து நடைபெற்ற பகுதியை நேரில் ஆய்வு செய்த பிரதமர் மோடி, இந்த விபத்துக்கான அனைத்துக் காரணங்களையும் கண்டறிய ஆணையிட்டார்.

    இந்நிலையில், இந்த விபத்து குறித்து குஜராத் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அரவிந்த் குமார், நீதிபதி ஆசுதோஷ் சாஸ்திரி ஆகியோர் அடங்கிய அமர்வு தாமாக முன்வந்து திங்கள்கிழமை விசாரித்தது. 

    இந்த விசாரணயின் பிறகு, பால விபத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பலியானது வருத்தமளிக்கிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், நீதிபதிகள் தெரிவித்துள்ளதாவது;

    குஜராத் பால விபத்து தொடர்பாக இதுவரை மாநில அரசு என்ன நடவடிக்கை மேற்கொண்டது என்பதை நீதிமன்றம் தெரிந்துகொள்ள விரும்புகிறது. இந்த வழக்கில் மாநில அரசு, மாநில உள்துறை அமைச்சகம், மோர்பி மாநகராட்சி, நகர்ப்பு வளர்ச்சி குழுமம், மாநில மனித உரிமைகள் ஆணையம் ஆகியவை ஒருதரப்பாக சேர்க்கப்படுகின்றன. மேலும், இத்துடன் மாநில தலைமைச் செயலர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரும் இணைக்கப்படுகின்றனர்.

    இதைத்தொடர்ந்து, வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்துத் தரப்பினர் மற்றும் மோர்பி மாவட்ட ஆட்சியருக்கு விபத்து தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும். 

    இவ்வாறாக அவர்கள் தெரிவித்தனர்.

    மேலும், அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து  நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

    இதையும் படிங்க: நாய்கள் நன்றியுள்ளது மட்டுமல்ல அன்பும் மிகுந்தது..! அது பற்றி நாம் அறியாத ஆச்சரிய தகவல்கள்..!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....