Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகுரங்கம்மை நோயைக் கண்டறிய 15 பரிசோதனை ஆய்வகங்கள் தயார்

    குரங்கம்மை நோயைக் கண்டறிய 15 பரிசோதனை ஆய்வகங்கள் தயார்

    குரங்கம்மை நோயைக் கண்டறிய 15 பரிசோதனை ஆய்வகங்கள் தயாராக உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது. 

    குரங்கம்மை பாதிப்பு உலக முழுவதும் இதுவரை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. குரங்கம்மை நோய் பாதிப்பு குறிப்பாக மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாக பரவி வருகிறது. 

    இந்நிலையில், இந்தியாவில் முதல் முறையாக ஐக்கிய அரபு அமீரிகத்திலிருந்து கேரளாவுக்கு வந்த ஒருவருக்கு நேற்று குரங்கம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நேற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியிருந்தது. 

    இதனிடையே, குரங்கம்மை நோயை கண்டறியும் வகையில் பரிசோதனை செய்வதற்காக நாடு முழுவதும் 15 ஆய்வகங்கள் தயாராக உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது. 

    இந்த அனைத்து ஆய்வகங்களும் புனேவில் உள்ள ஐசிஎம்ஆர் (ICMR)- தேசிய வைராலஜி நிறுவனம் மூலம் குரங்கம்மை நோயைக் கண்டறியும் சோதனையில் பயிற்சி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவுக்குள் நுழைந்தது குரங்கம்மை நோய்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....