Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்கனிமவள கடத்தல் குறித்த ஆதாரங்களை அண்ணாமலை கொடுத்தால் நடவடிக்கை எடுக்க தயார் : அமைச்சர் துரைமுருகன்

    கனிமவள கடத்தல் குறித்த ஆதாரங்களை அண்ணாமலை கொடுத்தால் நடவடிக்கை எடுக்க தயார் : அமைச்சர் துரைமுருகன்

    கனிமவள கொள்ளை குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அதிகாரப் பூர்வமாக தெரிவித்தால் நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

    முன்னதாக சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொறட்டகிரியில் இயற்கை வளம் கொள்ளை போவதை தடுக்க வேண்டும் என தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டிருந்தார். 

    இந்நிலையில், இன்று வேலூர் மாவட்டம், காட்பாடியில் காந்தி நகரில் 69-வது அனைத்து இந்திய கூட்டுறவு விழா நடைபெற்றது. இதில் நீர்வளம் மற்றும் கனிமவளத் துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டார். 

    பிறகு அவர், செய்தியாளர்களை சந்தித்தபொழுது, கனிம வளங்கள் கொள்ளையடிப்படுவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை உப்பு சப்பில்லாதது என்றும், இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் இருந்தால், நடவடிக்கை எடுக்கவும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். 

    மேலும் தென் பெண்ணை ஆறு நீர் பகிர்வு குறித்து நான்கு வாரங்களில் ஆணையம் அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமதன்ராம் உத்தரவிட்டுள்ளது; அதனால் தமிழக நீர்வளத்துறை செயலாளர் தில்லி சென்றுள்ளதால் அவர் வந்த பின்னர் அதைப்பற்றி கூறுவதாகவும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: சிங்களப் படையினரின் அத்துமீறலுக்கு முடிவே இல்லையா? – அன்புமணி ராமதாஸ்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....