Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஅமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் மருத்துவனையில் அனுமதி

    அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் மருத்துவனையில் அனுமதி

    நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உடல்நலக் குறைவால் இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    திமுகவின் பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறையின் அமைச்சருமான துரைமுருகனுக்கு இன்று அதிகாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 84 வயதாகும் அமைச்சர் துரைமுருகன் தற்போது சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    மேலும், அமைச்சர் துரைமுருகன் காய்ச்சல் காரணமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. இருப்பினும் எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை. 

    இதனால், இன்று நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் துரைமுருகன் கலந்து கொள்ளவில்லை. முன்னதாக, கடந்த டிசம்பர் மாதம் 24-ஆம் தேதி காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு காரணமாக துரைமுருகன் இரு நாள்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டார். 

    சில ஆண்டுகளுக்கு முன்பு இருதய பிரச்னைக்கு சிகிச்சை பெற்ற துரைமுருகன், அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவுக்கு எதிராக விளையாடவுள்ள ஆஸ்திரேலியா: அறிவிக்கப்பட்ட டெஸ்ட் அணி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....