Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்வாரிசு திரைப்படத்தை பார்த்த லோகேஷ் கனகராஜ்; என்ன சொல்கிறார்?

    வாரிசு திரைப்படத்தை பார்த்த லோகேஷ் கனகராஜ்; என்ன சொல்கிறார்?

    இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

    நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ திரைப்படம் கோலாகலமாக இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். மேலும், இயக்குநர் வம்சி இத்திரைப்படத்தை இயக்க, தமன் இசையமைத்துள்ளார். 

    தற்போது, ரசிகர்களும் பல திரைப்பிரபலங்களும் ஆவலுடன் வாரிசு திரைப்படத்தை கண்டுகளித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இன்று ‘வாரிசு’ திரைப்படத்தைக் கண்டுகளித்துள்ளார். 

    திரைப்படம் பார்த்து வெளிவந்த பிறகு அவரிடம் வாரிசு திரைப்படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது, ‘படம் சிறப்பாக வந்துள்ளது. எனக்கு பிடித்திருக்கிறது. ரசிகர்களும் கொண்டாட்டமாக படத்தை பார்த்து வருகின்றனர்.’ என்று தெரிவித்தார். இவரின் இந்த கருத்து தற்போது அதிகளவில் பரவி வருகிறது. 

    நடிகர் விஜய்யின் 67-ஆவது திரைப்படத்தை லோகஷ் கனகராஜ் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    திரையரங்கை பிரித்து மேய்ந்து ரகளையில் ஈடுபட்ட ரசிகர்கள்.. பரபரப்பு வீடியோ..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....