Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையில் இன்று முதல் பிங்க் மற்றும் ஐந்து புதிய பேருந்துகள் இயக்கம்; வழித்தடங்கள் தெரியுமா?

    சென்னையில் இன்று முதல் பிங்க் மற்றும் ஐந்து புதிய பேருந்துகள் இயக்கம்; வழித்தடங்கள் தெரியுமா?

    சென்னையில் ஐந்து புதிய வழித்தடங்களில் 10 சிற்றுந்துகள் இன்று முதல் இயக்கப்பட்டுள்ளது. 

    சென்னையில் ஐந்து புதிய வழித்தடங்களில் 10 சிற்றுந்துகளின் இயக்கத்தை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து இன்று (ஆகஸ்ட் 6) தொடங்கி வைத்தார்.

    மேலும், சென்னை மெரினா கடற்கரை, அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் மகளிர் இலவசமாக பயணம் செய்யும் சாதாரண கட்டணப் பேருந்துகளை எளிதில் தெரிந்து கொள்ள ஏதுவாக, பிங்க் வண்ணம் தீட்டப்பட்ட 50 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து, மகளிர் எளிதாக தெரிந்து கொள்ள ஏதுவாக, இனிவரும் காலங்களில், மற்ற மாவட்டங்களில் இயக்கப்படும் சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகளுக்கும், பிங்க் வண்ணம் தீட்டப்பட்டு இயக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

    mini_bustable

    அண்ணாசாலை, ஓமந்தூரார் மருத்துவமனை மெட்ரோ இரயில் நிலைய வளாகத்திலிருந்து, மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து சென்னையின் முக்கிய இடங்களுக்கு, ஐந்து புதிய வழித்தடங்களில் 10 இணைப்பு சிற்றுந்துகள் இயக்கத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கப்பட்டுள்ளது.

    ஓமனில் சிக்கி தவிக்கும் மீனவர்களை மீட்க தமிழக அரசு எழுதிய கடிதம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....