Sunday, March 17, 2024
மேலும்
    Homeவாழ்வியல்விவசாயம்இயற்கை விவசாயத்தில் மகசூலை அதிகரிக்கும் யுக்திகள்

    இயற்கை விவசாயத்தில் மகசூலை அதிகரிக்கும் யுக்திகள்

    விவசாயத்தில் அதிக மகசூல் என்பது எளிதில் சாத்தியமாகும். செயற்கை உரங்களைப் பயன்படுத்தினால் மட்டும் தான், அதிக மகசூல் கிடைக்கும் என்று விவசாயிகள் பலர் நம்புகின்றனர். செயற்கை உரப் பயன்பாட்டால், அதிக மகசூல் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால், தரமான விளைபொருட்கள் கிடைக்குமா? மண் வளம் பாதுகாக்கப்படுமா? என்று கேட்டால் நிச்சயம் இல்லை.
    மண்வளத்தைப் பாதுகாத்து, தரமான விளைபொருட்களைத் தருவது இயற்கை விவசாயம் ஒன்று தான். இயற்கை விவசாயத்தில் மகசூலை அதிகரிக்க முடியுமா என்றால், நிச்சயம் முடியும்.
    இன்று, சில விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் அதிக மகசூலை தரமானதாக பெற முடியும் என்று சாதித்து காட்டியுள்ளனர். மேலும், இயற்கை விவசாயத்தில் உரச்செலவு குறைவு என்பது இதன் சிறப்பம்சம்.
    இயற்கைப் விவசாயம் செய்வோருக்கு, அதிக அளவில் தண்ணீர் தேவைப்படுவதில்லை. குறைந்த அளவிலான தண்ணீரே போதுமானது. இதனால் செலவும் குறைகிறது.
    2,000 ஆண்டுகளுக்கு மேலாக நம் முன்னோர்கள் இயற்கை விவசாயத்தை, அதிக மகசூலோடு செய்து வந்தனர். ஆனால் இன்றோ, மகசூல் குறைந்து, இலாபம் குறையும் என்ற அச்சத்தில், விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு திரும்பாமல் இருக்கின்றனர். உண்மையில் இந்த அச்சம் வீணாணது.
    • இருக்கின்ற வளங்களை மறு சுழற்சி செய்து, மண் வளத்தைப் பாதுகாத்து பூச்சி நோய்த் தாக்குதலில் இருந்து பயிர்களை காக்க முடியும். மேலும், பஞ்சகவ்யா என்ற இயற்கை உரத்தை நாமே தயார் செய்து பயன்படுத்தினால் விளைச்சலை அதிகப்படுத்த முடியும்.
    • பயிர் நன்றாக வளர சணப்பை மற்றும் தக்கைப்பூண்டு பயிரிட்டு, மடக்கி உழ வேண்டும். இதனால், மண்ணில் கரிமப் பொருட்களின் அளவு அதிகரிப்பதோடு, பயிர்களுக்கு வேண்டிய தழைச்சத்தும் கிடைக்கும்.
    • மகசூலை அதிகரிக்க மற்றொரு சிறந்த முறை, ஒருங்கிணைந்த பண்ணையம் அமைப்பது. இதன் மூலம், பயிர்களுக்குத் தேவையான உரம் கால்நடை சாணம் வழியாக எளிதில் கிடைக்கும். மேலும், ஒருங்கிணைந்த பண்ணையத்தில் எதுவும் வீணாகாது.
    • மண்ணில் இருக்கும் தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து ஆகிய மூன்றும் சரியான அளவில் இருக்க வேண்டும். இதில், தழைச்சத்து பயிரினுடைய வளர்ச்சிக்கும், மணிச்சத்து வேர் மற்றும் கதிர் வளர்சிக்கும், சாம்பல் சத்து பூச்சி மற்றும் நோயில் இருந்து பயிரை பாதுகாக்கவும் உதவுகிறது.
    • இந்த 3 சத்துக்கள் குறைவாக இருந்தாலும் அதிகமாக இருந்தாலும் பயிர் பாதிக்கப்படும்; மகசூல் குறைந்து விடும்.
    • அதேபோல், மண்ணில் களர் (அமிலம் மற்றும் காரத்தன்மை உள்ள நிலம்) மற்றும் உவர் தன்மை (உப்புத்தன்மை வாய்ந்த நிலம்) அதிகமாக இருந்தாலும் பயிருக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காது. எனவே, மண்ணில் உள்ள சத்துகளின் அளவையும், களர் மற்றும் உவர் தன்மையையும் கண்டறிய வேண்டியது அவசியம்.
    • இவற்றைக் கண்டறிந்து, அதற்கேற்ப மண்ணைப் பண்படுத்தி, சம சீரான உரமிடலாம். மண்ணுக்கு ஏற்ற பயிரை தேர்வு செய்ய வேண்டியதும் அவசியம். குறிப்பாக உரத் தேர்வு மற்றும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகத்தை மேற்கொள்ளலாம்.
    இவ்வாறாக திட்டமிட்டு சாகுபடி செய்தால், செலவும் குறையும்; மகசூலும் அதிகரிக்கும். மண்ணின் தன்மையை தெரிந்து கொண்டு, அதற்கேற்றவாறு பயிர் சுழற்சி முறையில் சாகுபடி முறைகளை மேற்கொண்டால் உரிய மகசூல் நிச்சயம் கிடைக்கும்.
    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....