Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுவேடந்தாங்கலில் குவியும் வெளிநாட்டு பறவைகளை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம்

    வேடந்தாங்கலில் குவியும் வெளிநாட்டு பறவைகளை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம்

    வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் வலசைக்கு வந்துள்ளன. 

    செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்து உள்ளது பெயர் போன வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். இங்கு ஆண்டுதோறும் வெளிநாடுகளில் இருந்து பறவைகள் வலசைக்கு வருவது வழக்கம். குறிப்பாக பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வித்தியாசமான பறவைகள் வருகின்றன. 

    அந்த வகையில் பாம்பு தாரா, அரிவாள் மூக்கன், வர்ணனாரை, ஊசிவால் வாத்து உள்ளிட்ட 26-க்கும் மேற்பட்ட பறவை வகைகள் வருகை தருவது வழக்கமான ஒன்று. 

    இந்நிலையில் இந்த ஆண்டு வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வருகை தந்துள்ளன. ஏரி நிரம்பி இருப்பதால் பறவைகளின் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்து வருகிறது. 

    தற்போது அரையாண்டு மற்றும் புத்தாண்டு விடுமுறை காரணமாக நேற்று சுற்றுலா பயணிகளின் வருகையும் பறவை ஆர்வலர்களின் வருகையும் அதிகரித்து காணப்பட்டது. மேலும் அவர்கள் வித்தியாசமான பறவைகளை கண்டு மகிழ்ந்தனர்.

    பத்திரிகையாளரை மிரட்டினார்களா ரஜினி ரசிகர்கள்; வைரலாகும் காணொளி..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....