Thursday, March 21, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'அனைவரையும் திருப்திபடுத்தக்கூடிய படைப்பு என்ற ஒன்று இல்லை' - மைக்கேல் பட இயக்குநர்!

    ‘அனைவரையும் திருப்திபடுத்தக்கூடிய படைப்பு என்ற ஒன்று இல்லை’ – மைக்கேல் பட இயக்குநர்!

    அனைவரையும் திருப்திபடுத்தக்கூடிய படைப்பு என்ற ஒன்று இல்லையென மைக்கேல் திரைப்படத்தின் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். 

    விஜய் சேதுபதி மற்றும் காயத்ரி நடிப்பில் வெளியான புரியா புதிர், ஹரிஷ் கல்யாண் மற்றும் ஷில்பா நடிப்பில் வெளியான இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் போன்ற திரைப்படங்களை இயக்கியவர்தான், ரஞ்சித் ஜெயக்கொடி. 

    இவர் இயக்கத்தில் கடந்த ஜனவரி 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மைக்கேல்’. சந்தீப் கிஷன், திவ்யான்ஷா கௌசிக், விஜய்சேதுபதி, வரலட்சுமி சரத்குமார், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்திருந்தார்.

    இப்படம், ரசிகர்களிடையே அதிகளவில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில், விமர்சனங்கள் குறித்து இப்படத்தின் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி மனம் திறந்துள்ளார். 

    அதன்படி, அவர் தெரிவித்துள்ளதாவது;

    நன்றி! உங்கள் கருத்துகளுக்கு எனது அன்பு. எனது எல்லாப் படைப்புகளையும் போலவே மைக்கேல் திரைப்படமும் என் இதயத்துக்கு நெருக்கமான ஒன்றுதான். அதற்கும் என் 100% உழைப்பையே கொடுத்திருக்கிறேன். அனைவரையும் திருப்திபடுத்தக்கூடிய படைப்பு என்ற ஒன்று இல்லை. ஒவ்வொருவருக்கும் ரசனையும் விருப்பத்தேர்வும் மாறுபடவே செய்யும்.  மைக்கேல்-ஐ ரசித்தவர்களுக்கு நன்றி;  மாறுபட்ட கருத்துக் கொண்ட ரசிகர்களுக்கு, அடுத்த முறை உங்களையும் கவரும் ஒரு சினிமாவுக்காக உழைக்கத் தயாராக இருக்கிறேன. உங்கள் அனைத்து கருத்துக்களையும் மதிக்கிறேன். ஆகப்பெரும் வாஞ்சையுடன், ரஞ்ஜித் ஜெயக்கொடி.

    என்று குறிப்பிட்டுள்ளார். 

    ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் பிந்து மாதவி நடிப்பில் ‘யாருக்கும் அஞ்சேல்’ என்ற திரைப்படம் உருவாகி, வெளியாகாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

    சேலத்தில் பரபரப்பு; பிரபல ரௌடி வெட்டிப் படுகொலை செய்த ஆறு பேர் கொண்ட கும்பல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....