Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமேட்டூர் அணை; காவிரி டெல்டாவுக்கு தண்ணீர் இன்று மாலை முதல் நிறுத்தம்!

    மேட்டூர் அணை; காவிரி டெல்டாவுக்கு தண்ணீர் இன்று மாலை முதல் நிறுத்தம்!

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு இன்று மாலை முதல் தண்ணீர் திறப்பு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தின் முக்கிய அணைகளில் முதன்மையாக பார்க்கப்படும் அணை மேட்டூர் அணை. இந்த அணையானது காவிரி ஆற்றுப்படுகையின் மேல் கட்டப்பட்டுள்ளது. காவிரி டெல்டா பாசனத்திற்கு இந்த அணையின் பங்கு முக்கியமானது. 

    இந்நிலையில், இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 896 கன அடியிலிருந்து வினாடிக்கு 933 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும், அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6,000 கன வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

    இத்துடன், அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் 103.87 அடியாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி, அணையின் நீர் இருப்பு 79.94 டி.எம்.சியாக உள்ளது.

    இதைத்தொடர்ந்து, இன்று மாலை முதல் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    குஜராத் மோர்பி பால விபத்து; 1200 பக்கத்தில் குற்றப்பத்திரிகை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....