Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமுதல் நகர்வை சந்திக்க உள்ள கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் பணி....

    முதல் நகர்வை சந்திக்க உள்ள கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் பணி….

    சென்னை மீனம்பாக்கம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் பணி விரைவில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து வண்டலூர் அருகில் உள்ள கிளாம்பாக்கம் வரையில் 15.5 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு, பல மாதங்களுக்கு முன் தமிழ அரசிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. 

    இதைத்தொடர்ந்து, மீனம்பாக்கம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ பணிகள் குறித்த எந்த தகவலும் வெளிவராமல் இருந்தன. இந்நிலையில், இந்த மெட்ரோ திட்டத்தை சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் கட்டுமானம் மேற்கொள்ள பரிந்துரை செய்துள்ளது.

    அதன்படி, இனி இந்த திட்டத்துக்கு ஏற்ற டெண்டர்களைத் தொடங்கி, கையகப்படுத்துவதற்கான நிலத்தை அடையாளம் காணத் தொடங்கலாம் என்று சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்  தெரிவித்துள்ளது.

    4,080 கோடி மதிப்பீட்டில் முடிவெடுக்கப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கு, தமிழக அரசின் அதிகாரபூர்வ ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீட்டிற்கு பிறகு, மெட்ரோ ரயில்கான கட்டுமானப் பணி தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி அமையவுள்ள இந்த மெட்ரோ ரயில் பாதை பல்லாவரம், குரோம்பேட்டை, திரு.வி.க., நகர், தாம்பரம் வழியாக இரும்புலியூர், பீர்க்கங்காரணை, பெருங்களத்துார், வண்டலுார் அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா தடத்தின் வழியே கிளாம்பாக்கத்தை அடையவுள்ளது.

    ”யோவ்…பிரஷர் போடாதயா’’ – வாரிசு பட இசையமைப்பாளர் ட்விட்டரில் கலகல பதிவு..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....