Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதுணிந்த காவல்துறை...கிடைத்த ரூ.30 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்

    துணிந்த காவல்துறை…கிடைத்த ரூ.30 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்

    மிசோரம் தலைநகர் ஐஸ்வாலில் ரூ.30 கோடி மதிப்புள்ள மெத்தாம்பேட்டமைன் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

    இந்தியாவில் சமீப காலமாக எப்போதும் இல்லாத அளவுக்கு போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகின்றனர். பல முக்கிய இடங்களில் சோதனைச் சாவடிகளை அமைத்து சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

    இதையும் படிங்க: நாகர்கோயில் காசி வழக்கில் புதிய திருப்பம்; குவைத்திலிருந்து ஆபாச வீடியோக்கள் பதிவிட்ட நண்பன் கைது

    இந்நிலையில், அசாம் காவல்துறை, மாநில கலால் மற்றும் போதைப்பொருள் துறை அதிகாரிகள் திங்களன்று ஐஸ்வாலின் வடகிழக்கு பகுதியில் உள்ள பால்க்லாந்தில் நடமாடும் வாகன சோதனைச் சாவடியை அமைத்து சோதனையிட்டு வந்தனர். 

    சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த காரை மறித்து, சோதனை செய்ததில் அதிலிருந்த ரூ.30.84 கோடி மதிப்புள்ள 92,550 மெத் மாத்திரைகளை மீட்டனர். இது தொடர்பாக கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.  மெத் மாத்திரைகள் மெத்தாம்பேட்டமைன் எனப்படும் சட்டவிரோத போதைப்பொருள் மருந்துகளில் ஒன்றாகும். கைது செய்யப்பட்ட ஓட்டுநரை தற்போது விசாரித்து வருகின்றனர். 

    இதையும் படிங்க: ஜெயலலிதா மரணம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணை அறிக்கை; அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....