Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்மர்ம தேசம், ஜீ பூம்பா சீரியல் நடிகர் தற்கொலை; அதிர்ச்சியில் உறைந்த சின்னத்திரை

    மர்ம தேசம், ஜீ பூம்பா சீரியல் நடிகர் தற்கொலை; அதிர்ச்சியில் உறைந்த சின்னத்திரை

    ‘மர்ம தேசம் விடாது கருப்பு’ தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்த லோகேஷ் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    1990 ஆம் ஆண்டுகளில் தொலைக்காட்சி தொடர்களாக வெளியான மர்ம தேசம், ஜீ  பூம்பா உள்ளிட்ட தொடர்களைப் பார்த்த 90 கிட்ஸ் அதை அவ்வளவு எளிதாக மறந்திட மாட்டார்கள். இந்தத் தொடரில் வரும் ஒரு குதிரையை பார்த்தே பயந்து நடுங்கின காலங்களும் உண்டு.

    மிக சமீபத்தில் மர்மதேசம் தொடர் வெளியாகி 25 ஆண்டுகள் ஆனது. அதனை பலரும் கொண்டாடினர். இந்தப் புகைப்படங்களும் இணைய தளங்களில் வெளியாகி மீண்டும் வைரலானது. 

    அந்தப் புகைப்படங்களில், பலரும் பார்த்து ஆச்சரியப்பட்டது குட்டி ராசுவாக நடித்த லோகேஷை பார்த்து தான். குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆன லோகேஷ் ராஜேந்திரன் இளைஞனாக வளர்ந்து இருந்தார்.

    மர்ம தேசம் தொடரை விடவும் ‘ஜீ பூம்பா’ தொடர் இவருக்கு பெரும் வரவேற்பை கொடுத்தது. 

    இதைத்தொடர்ந்து, நாகா அறிவுரையின் பேரில் லோகேஷ், நடிப்பதை விட்டு இயக்கம் மற்றும் சினிமா சார்ந்த தொழில் நுட்ப வேலைகளில் கவனம் செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது. 

    இந்நிலையில், கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மயங்கிய நிலையில் கிடந்த லோகேஷை மீட்டு அங்கிருந்தவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

    அப்போது, அவர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மயங்கிய நிலையில் இருந்தது தெரியவந்தது. பின், அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்தச் சம்பவம் குறித்து, கோயம்பேடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    மேலும், முதற்கட்ட விசாரணையில் லோகேஷ் காஞ்சிபுரத்தில் தனது தாயுடன் வசித்து வந்ததும், குடும்ப பிரச்சனையால் லோகேஷ் கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது.

    தற்கொலை தடுப்பு தொடர்பு எண் :  104

    இதையும் படிங்க: ஹோட்டலில் தண்ணீருக்கு பதில் ஆசிட் வழங்கிய ஊழியர்கள்; 2 சிறுவர்களுக்கு நடந்த கொடூரம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....