Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ஓம் என் ரூமுக்கு வா? ஆதி புருஷ் டீசர் ட்ரோல்களால் டைரக்டர் மீது கடுப்பான பிரபாஸ்..

    ஓம் என் ரூமுக்கு வா? ஆதி புருஷ் டீசர் ட்ரோல்களால் டைரக்டர் மீது கடுப்பான பிரபாஸ்..

    ஓம் ராவத்துக்கும், பிரபாஸுக்கும் இடையே மோதல் என்று வெளியாகியுள்ள தகவல்கள் தவறானவை என ஆதி புருஷ் படக்குழு தெரிவித்துள்ளது. 

    பிரபாஸ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம்தான், ‘ஆதி புருஷ்’. இந்தியாவின் பல மொழிகளில் இத்திரைப்படம் வெளியாகவிருக்கிறது. பாகுபலிக்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் திரைப்படங்கள் உலகளவில் கவனம் பெற்று வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் ‘ஆதி புருஷ்’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.

    டீசர் வெளியான முதலே, சமூக வலைதளங்களில் பல்வேறு ட்ரோல்களுக்கு ‘ஆதி புருஷ்’ உள்ளானது. மேலும், நெட்டிசன்கள் மீம்ஸ்களை உருவாக்கி பகிர்ந்து வருகின்றனர். 

    இந்நிலையில், நடிகர் பிரபாஸ் கோபமாக ஆதிபுருஷ் இயக்குநர் ஓம் ராவத்தை தனது அறைக்கு அழைப்பது போன்ற வீடியோ சமீபத்தில் இணையத்தில் வெளியானது. டீசருக்கு கிடைத்த வரவேற்பு காரணமாகவே பிரபாஸ் கோபமாக இயக்குநரை கண்டிக்க தனது ரூமுக்கு வா என்று அழைக்கிறார் என்று நெட்டிசன்கள் பலர் தங்களது கருத்துகளை ட்விட்டரில் தெரிவித்து வந்தனர். 

    சூழல்கள் இப்படியாக இருக்க, ‘ஆதி புருஷ்’ படக்குழு இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது:

    திரைப்படத்தின் விளம்பரங்களைப் பற்றி விவாதிக்க மட்டுமே பிரபாஸ் ஓம் ராவத்தை அறைக்கு அழைத்தார். தனது ரசிகர்களுக்காக பிரத்யேகமாக ஏதேனும் செய்வது குறித்தே பிரபாஸ் ஆலோசனை நடத்தினார். ஓம் ராவத்துக்கும் பிரபாஸுக்கும் இடையே மோதல் என்று வெளியாகியுள்ள தகவல்கள் தவறானவை. 

    இவ்வாறு படக்குழு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    இதையும் படிங்க: ‘லவ் டுடே’ திரைப்படத்தின் ட்ரைலரை வெளியிடவுள்ள முன்னணி நடிகர்…உற்சாகத்தில் படக்குழு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....