Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமணிப்பூரில் திடீர் நிலச்சரிவு! 14 பேர் பலி

    மணிப்பூரில் திடீர் நிலச்சரிவு! 14 பேர் பலி

    மணிப்பூரி உள்ள நோனே மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. 

    மணிப்பூர் மாநிலம், நோனே மாவட்டத்தின் துபூல் என்ற ரயில் நிலையம் அருகே கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் காணாமல் போன பிராந்திய இராணுவ 55 பேர் மற்றும் தொழிலாளர்களை தேடும் பணிகளில் இந்திய இராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் குழு ஈடுபட்டு வருகின்றன. 

    இதனிடையே, நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை நிலச்சரிவில் சிக்கிய 23 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    நிலச்சரிவால் பாறைகள் சரிந்து இஜாய் ஆற்றின் குறுக்கே விழுந்துள்ளதால், பலி எண்ணிக்கையானது மேலும் அதிகரிக்கக் கூடும் என தெரிகிறது. 

    பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என சம்பவ இடத்துக்கு சென்று நேரில் பார்வையிட்ட, மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் அறிவித்துள்ளார். 

    மேலும், நிலச்சரிவில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    மீண்டும் தலைதூக்கும் கொரோனா- இனி முகக்கவசம் கட்டாயம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....