Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஇங்கிலாந்துக்கு எதிராக இரு அணிகளை களமிறக்கும் இந்தியா!

    இங்கிலாந்துக்கு எதிராக இரு அணிகளை களமிறக்கும் இந்தியா!

    இங்கிலாந்துக்கு எதிரான இருபது ஓவர் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய அணியானது இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இவையில்லாமல், ஒருநாள் மற்றும் இருபது ஓவர் தொடரிலும் இந்திய அணியானது விளையாடவுள்ளது.

    இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள இருபது ஓவர் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இருபது ஓவர் போட்டிகளை பொறுத்தமட்டில், முதல் இருபது ஓவர் போட்டிக்கு அயர்லாந்து அணியுடன் விளையாடிய இந்திய அணி வீரர்களையே இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

    அதன்படி, முதல் இருபது ஓவர் போட்டியில், ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷான், ருதுராஜ் கெயிக்வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக் (வி.கீ), ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயர், யுவேந்திர சாஹல், அக்சர் படேல், ரவி பிஷ்னாய், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் ஆகியோர் இடம்பெற்ற அணியானது களமிறங்க உள்ளது.

    இரண்டு மற்றும் மூன்றாம் இருபது ஓவர் போட்டிகளுக்கு, ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஷ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக் (வி.கீ), ரிஷப் பண்ட் (வி.கீ), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, யுவேந்திர சாஹல், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், ஹர்ஷல் படேல், உம்ரன் மாலிக் ஆகியோர் அடங்கிய அணியானது களமிறங்க உள்ளது.

    இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா விளையாடவுள்ள இருபது ஓவர் போட்டியானது, வருகிற 7-ம் தேதி தொடங்கி 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

    ‘பத்தல பத்தல’ கமல்ஹாசனின் இந்த ‘சாகாத’ முகம் உங்களுக்குத் தெரியுமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....