Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமங்களூரு குண்டுவெடிப்பு: இலக்கை அடையவில்லை என்றாலும், வெற்றியாக கருதுவதாக இஸ்லாமிய அமைப்பு அறிவிப்பு...

    மங்களூரு குண்டுவெடிப்பு: இலக்கை அடையவில்லை என்றாலும், வெற்றியாக கருதுவதாக இஸ்லாமிய அமைப்பு அறிவிப்பு…

    மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் இலக்கை அடையவில்லை என்றாலும் இதை வெற்றியாக கருதுவதாக என இஸ்லாமிக் ரெசிடென்ஸ் கவுன்சில் பொறுப்பேற்று உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    மங்களூருவில் கடந்த நவம்பர் 19 ஆம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இந்த ஆட்டோவில் பயணித்த முகமது ஷாரிக், ஆட்டோ ஓட்டுநர் புருஷோத்தம் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். 

    இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் முகமது ஷாரிக், ஐ.எஸ். பயங்கரவாத மைப்புடன் தொடர்பில் இருந்ததும், அவர் மங்களூருவில் பெரிய அளவில் குண்டு வெடிப்பு சம்பவத்தை அரங்கேற்ற திட்டமிட்டதும் தெரியவந்துள்ளது. மேலும், கோவை குண்டு வெடிப்புக்கும் மங்களூரு குண்டு வெடிப்புக்கும் சம்பந்தம் உள்ளதா என்ற கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. 

    இந்தச் சம்பவம் குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மங்களூர் குண்டுவெடிப்புக்கு இஸ்லாமிக் ரெசிடென்ஸ் கவுன்சில் என்ற அமைப்பு பொறுப்பேற்று இருப்பதாக கர்நாடக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

    மேலும் இலக்கை அடையவில்லை என்றாலும், இதை வெற்றியாக கருதுவதாகவும் குறிப்பிட்டு கடிதம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    நிலநடுக்கத்தில் சிக்கிய சிறுவன்; இரு நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....