Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்உயிரியல் பூங்காவில் பாதுகாப்பு வேலியை தாண்டி குதித்தவரை கொன்ற சிங்கம் 

    உயிரியல் பூங்காவில் பாதுகாப்பு வேலியை தாண்டி குதித்தவரை கொன்ற சிங்கம் 

    ஆப்பிரிக்க நாட்டு உயிரியல் பூங்காவில் பாதுகாப்பு வேலியை தாண்டி குதித்த நபரை சிங்கம் கொன்றது. 

    மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவின் தலைநகர் அக்ராவில் அந்நாட்டின் தேசிய உயிரியல் பூங்கா இருக்கிறது. 

    இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 28) முன்தினம் எப்போதும் போல் பூங்காவுக்கு ஏராளமான பார்வையாளர்கள் வந்திருந்தனர். 

    உயிரியல் பூங்காவுக்கு வந்த பார்வையாளர்கள், அங்கு பராமரிக்கப்பட்டு வரும் விலங்குகளை ஆர்வத்துடன் பார்த்து ரசித்து வந்தனர். அப்போது, சிங்கங்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு சென்ற ஒரு நபர், திடீரென வேலியை தாண்டி சிங்கங்கள் இருக்கும் உள்பகுதிக்குள் குதித்தார். இதைப்பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

    பின்பு உடனே, உயிரியல் பூங்கா அதிகாரிகள் விரைந்து வந்து சிங்கங்களிடம் இருந்து அந்த நபரை காப்பாற்ற முயன்றனர். ஆனால், அதற்குள் ஒரு சிங்கம் அவரை கடித்து கொன்றது. 

    இந்நிகழ்வு, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன்காரணமாக அந்த உயிரியல் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

    மருத்துவமனை வளாகத்தில் பாம்பு; அலறியடித்து ஓடிய பொதுமக்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....