Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுசெஸ் போட்டியில் மீண்டும் கெத்து காட்டும் பிரக்ஞானந்தா

    செஸ் போட்டியில் மீண்டும் கெத்து காட்டும் பிரக்ஞானந்தா

    22-வது துபாய் ஓபன் செஸ் போட்டி மூன்று வருடங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் நடைபெற்று வருகிறது.

    தற்போது நடைபெறும் 22-வது துபாய் ஓபன் செஸ் போட்டியில் 171 வீரர்கள் பங்கேற்கிறார்கள். பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி உள்ளிட்ட 78 இந்திய வீரர்கள் இப்போட்டியில் விளையாடுகிறார்கள். 

    இந்த துபாய் ஓபன் செஸ் போட்டி செப்டம்பர் 5 அன்று நிறைவுபெறுகிறது. முதல் இரு ஆட்டங்களில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, 3-வது சுற்றில் சக இந்திய வீரரான ஷ்யாம் நிகிலை வீழ்த்தினார். இதனால் 3 புள்ளிகளுடன் 7 பேருடன் இணைந்து முதலிடத்தில் உள்ளார் பிரக்ஞானந்தா. முதலிடத்தில் பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, சஹாஜ் குரோவர் என மூன்று இந்திய வீரர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    முன்னதாக, சமீபத்தில் நடைபெற்ற கிரிப்டோ கோப்பைப் போட்டியில் பிரக்ஞானந்தா 2-வது இடம் பெற்றார். 

    சர்வதேச கிரிக்கெட்டில் சாதித்த ரோகித் ஷர்மா!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....