Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்உணவு டெலிவரி செய்யும் பையில் மம்மி காதலி! காவல்துறையிடம் சிக்கிய இளைஞர்

    உணவு டெலிவரி செய்யும் பையில் மம்மி காதலி! காவல்துறையிடம் சிக்கிய இளைஞர்

    உணவு டெலிவரி செய்யும் பையில் 800 ஆண்டு பழமையான மம்மியை தனது காதலி என தூக்கி கொண்டு சுற்றிய இளைஞரிடம் இருந்து, மம்மி பறிமுதல் செய்யப்பட்டது. 

    பெரு நாட்டைச் சேர்ந்தவர் ஜூலியோ சீசர் பெர்மேஜா. இவருக்கு வயது 26. இவர் உணவு டெலிவரி செய்யும் வேலையை பார்த்து வந்தார். இந்நிலையில், இவர் தனது நண்பர்களுடன் பூங்கா ஒன்றில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் ஜூலியோ சீசர் வைத்திருந்த உணவு டெலிவரி பையை திறந்து பார்த்தனர். மேலும் அதில் இருந்த மம்மி உடலை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 

    இதுகுறித்து, ஜூலியோ சீசரிடம் காவல்துறை விசாரணை நடத்தினர். இதற்கு அவர், அந்த மம்மி தனது அப்பா 30 ஆண்டுகளுக்கு முன்பாக வீட்டிற்கு கொண்டு வந்து வைத்திருந்ததாக தெரிவித்தார். 

    மேலும் அந்த மம்மி தனது காதலி என்றும், அந்த மம்மியோடு உரையாடுவதகவும், அதனுடன் தூங்குவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது நணபர்களிடம் மம்மியை காட்டுவதற்காக எடுத்துச் சென்றதாக சீசர் தெரிவித்துள்ளார். 

    இதையடுத்து, மம்மியை பறிமுதல் செய்த காவல்துறையினர் தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தனர். 

    மம்மியை ஆராய்ச்சி செய்ததில், மம்மி இறந்த ஆண் நபரின் உடல் எனவும், 600 முதல் 800 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம். மஹிஸ்பானிக் காலத்திற்கு முந்தைய மம்மி எனவும், இந்த மம்மி குறைந்தது 45 வயதுடைய மனிதருடையதாக இருக்கலாம் எனவும் கலாச்சார அமைப்பு தெரிவித்துள்ளது. 

    இந்த மம்மி பண்டைய கால பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் அருங்காட்சியத்திற்கு எடுத்துச் செல்லப்பட இருப்பதாக பெரு அரசு தெரிவித்துள்ளது. 

    ‘அனுபவத்தில் சொல்கிறேன்…’ – வைரலாகும் செல்வராகவன் பதிவு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....