Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகாலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் - தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்

    காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் – தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்

    ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

    முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் என்ற பெயரில், இந்த காலை சிற்றுண்டி திட்டம் மதுரையில் இன்று (செப்டம்பர் 15) முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

    மதுரை, ஆதிமூலம் மாநகராட்சியில் உள்ள பள்ளியில் மாணவ-மாணவியர்களுக்கு முதல்வர் காலை உணவை பரிமாறினார். அதன் பிறகு, அவர்களுடன் அமர்ந்து உண்டதோடு, முதல்வர் அருகில் இருந்த மாணர்வகளுக்கும் உணவை ஊட்டினார்.  

    இந்தக் காலை சிற்றுண்டி திட்டத்துக்காக ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: மன்னிப்பு கேட்டும் கோபப்பட்ட ஆசிரியை.. முத்தம் கொடுத்து சமாதானம் செய்த மாணவன் – வைரல் வீடியோ

    சென்னை மாநகராட்சி பொறுத்தவரையில், 36 பள்ளிகளில் 5,941 மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழக்கங்ப்படவுள்ளது.

    14 மாநகராட்சிகளில் 318 பள்ளிகளில் 37,740 மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது 

    23 நகராட்சிகளில் 163 பள்ளிகளில் 17,427 மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது.

    11 வட்டாரங்களில் 728 பள்ளிகளில் 42,826 மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது. 

    6 மலைப்பகுதிகளில் 237 பள்ளிகளில் 10,161 மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது.

    tamilnadu morning breakfast

    காலை சிற்றுண்டி பட்டியல்: 

    திங்கள்கிழமை– அரிசி உப்புமா, ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா மற்றும் காய்கறி சாம்பார்

    செய்வாய்க்கிழமை– ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி. 

    புதன்கிழமை– வெண் பொங்கல், ரவா பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார். 

    வியாழக்கிழமை– அரிசி உப்புமா, ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா மற்றும் காய்கறி சாம்பார்

    வெள்ளி– ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி, ரவா கேசரி, சேமியா கேசரி.

    வாரத்தில் குறைந்தது 2 நாள்கள் உள்ளூர் சிறுதானியங்களைக் கொண்டு காலை சிற்றுண்டி வழங்கப்படும். 

    இதையும் படிங்க: வகுப்பறைக்குள் டூ வீலர் பார்க்கிங்? அரசு பள்ளி ஆசிரியர்களின் செயலால் மக்கள் வேதனை

    காலை சிற்றுண்டி திட்டத்துக்கான குறிக்கோள்கள்: 

    • மாணவர்கள் பள்ளிக்கு வருவதை உறுதி செய்தல். 
    • மாணவர்களுக்கு ஊட்டச்சத்தை உயர்த்துதல். 
    • மாணவர்களின் வருகையை அதிகரித்தல்.
    • வேலைக்கு செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல். 

    காலை சிற்றுண்டி திட்டத்துக்கான வழிமுறைகள்: 

    • உணவு தயாரிக்க பயன்படுத்தும் பொருள்கள் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையத்தின் (FSSAI) நெறிமுறைகளின்படி இருத்தல் வேண்டும். 
    • உணவு தயாரிப்பதில் வேறு வெளி மூலப் பொருள்கள் சேர்க்க கூடாது. 
    • உள்ளூர் உள்ள சமையல் எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும். 
    • காய்கறிகளின் தரத்தை உறுதி செய்ய வேண்டும். 
    • உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடிக்கடி பள்ளிகளை ஆய்வு செய்ய வேண்டும். 
    • பள்ளி மேலாண்மை குழு தினசரி உணவை ருசி பார்க்க வேண்டும். 

    morning breakfast mk stalin

    திட்டத்தின் கண்காணிப்பு பணி:

    காலை சிற்றுண்டி திட்டத்தை கண்காணிக்க சமூக நலன், ஊரக வளர்ச்சி, நகர்ப்புறம், மகளிர் மேம்பாட்டு நிறுவனம், பள்ளிக் கல்விதுறை, ஒருங்கிணைத்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள், உணவு பாதுகாப்பு துறை ஆகிய அதிகாரிகளால் அடங்கிய குழு மாநில, மாவட்ட மற்றும் பள்ளி அளவில் அமைக்கப்பட உள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....