Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்"நாங்கள் மூவரும் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளவேயில்லை" - பாடலாசிரியர் தாமரை பகிர்ந்த சுவாரஸ்யம்!

    “நாங்கள் மூவரும் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளவேயில்லை” – பாடலாசிரியர் தாமரை பகிர்ந்த சுவாரஸ்யம்!

    ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தில் உள்ள பாடல் குறித்து திரைப்பாடலாசிரியர் கவிஞர் தாமரை பேசியுள்ளார். 

    வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் மிகவும் மெலோடியாக உள்ள ஒருபாடல்தான். ‘உன்ன நெனச்சதும்’ எனத் தொடங்கும் பாடல். இப்பாடலை பாடலாசிரியர் தாமரை எழுத, ஸ்ரேயா கோஷல், சர்தக் கல்யாணி போன்றோர் பாடினர்.

    இந்நிலையில், இப்பாடல் குறித்து தனது வலைதளத்தில் பாடலாசிரியர் தாமரை பேசியுள்ளார். 

    அவர் தெரிவித்திருப்பதாவது: 

    கௌதம் கதை சொல்லும் போதே இப்படியொரு பாடல் வரும் என்று சொல்லியிருந்தார். இருவரும் பேசிக் கொள்வது போல் இருக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். இரவு நேரம் தொலைவில் எங்கிருந்தோ ஒரு பழைய பாடல் காற்றில் தவழ்ந்து வரலாம், அதை இவர்கள் தொடர்வது போல் வைத்தால் கவித்துவமாக இருக்குமில்லையா என்றார். பி.சுசீலா பாடல், பழைய பாடல் என்றதும் எனக்குக் கேட்கவா வேண்டும். நான் ஏதேதோ கற்பனையில் விழுந்து எனக்குப் பிடித்த எண்ணற்ற பி.சுசீலா பாடல்களை அடுக்க ஆரம்பித்தேன். 

    இதையும் படிங்க : வெளிவந்த வாரிசு அப்டேட்.. ஆக்‌ஷன் காட்சிகள் எப்படி இருக்கப்போகுதோ!

    அதெல்லாம் இல்லை, கொடியசைந்ததும் தான் ரகுமான் சார் தேர்ந்தெடுத்திருக்கார், அதைப் பத்தி யோசிங்க என்றார். (எனக்கும் அது பிடித்த பாடல்தான்).

    பிறகு கோவிட் காலம். யாரும் சந்தித்துக் கொள்ள முடியவில்லை. ரகுமான் அவர்கள் திடீரென்று ஓரிரவு ‘சூம் ஆப்’ வழியாக வந்தார், கௌதமும் இணைந்தார். பேசிப் பேசியே பாடல் சூழல் உருவானது. எடுத்த எடுப்பிலேயே முத்தம் கேட்பது வேண்டாம் கௌதம் என்றேன், இல்லையில்லை பாடலுக்கு முந்தைய உரையாடலிலேயே அது வந்து விடும், எனவே தப்பாகத் தெரியாது என்றார். எனவேதான், ‘மனசு மயங்கிதான் முத்தம் கேட்டது’ என்று எழுதி, நாயகன் தடாலென்று முத்தம் கேட்ட அதிர்ச்சியை சமன் செய்தேன்.

    அதன்பிறகு என் வழக்கமான பல்லவியை ரகுமான் அவர்களிடம் ஆரம்பித்தேன், மெட்டு மறந்திரும், எனக்கு சரியா தத்தகாரத்தில போட்டு மெட்டு அனுப்புங்கன்னு. பிறகு அடுத்தநாள் பல்லவி மெட்டு மின்னஞ்சலில் வந்தது. நான் எழுதி அனுப்பி, பல நாட்களுக்குப் பிறகே சரணம் மெட்டு வந்தது. கௌதமுக்கு நான் எழுதிய வரிகள் மிகமிகப் பிடித்திருந்தது. அப்படியே போய்ப் பதிவு பண்ணிருங்க என்றார்.

    அதன்பிறகு பல மாதங்கள் கழித்தே பாடல்பதிவு நடந்தது. வேறு சிலர் பாட, பதிவு செய்து அனுப்பினேன் (ரகுமான் துபாயில், கௌதம் படப்பிடிப்பில்). இறுதியாக மீண்டும் ஸ்ரேயா கோஷல், சர்தக் கல்யாணி பாடினார்கள். ஸ்ரேயா பாடியது எனக்குத் தெரியாது, இங்கு வந்து பாடினாரா அல்லது அவருடைய இடத்திலிருந்து பாடினாரா என்று தெரியவில்லை. 

    பாடலை எனக்கு  உதவியாளர்கள் அனுப்பினார்கள். திருத்தங்கள் சொன்னேன், குறித்துக் கொண்டு சரிசெய்து மீண்டும் அனுப்பினார்கள். அவ்வளவு அழகாக இருந்தது. சர்தக் புதிய பாடகர், கோப்ராவில் ‘தரங்கிணி’ பாடியவர், தமிழ் தெரியாது, அவரோடு இரண்டு இரவுகள் தமிழ் சொல்லிக் கொடுத்து பாடல் பதிவு செய்து ரகுமான் அவர்களுக்கு அனுப்பினோம். ஆக, 10 மாதங்கள் விட்டு விட்டு நடந்தது இந்தப் பாடல் பணி. நாங்கள் மூவரும் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளவேயில்லை. 

    இவ்வாறாக தாமரை பேசினார்.

    மேலும், இருபுறம் மதில் என்பதுதான்,  பாடும்போது ‘ம’ கரைந்து ‘அதில்’ என்று கேட்கிறது.  இந்தக் குறையை கவனித்து முன்பே வேறு வரிகள் எழுதிக் கொடுத்திருந்தேன். தடக்குரலில் அது இல்லாததாலும், ஷ்ரேயா பாடியது எனக்குத் தெரியாததாலும் முன்பிருந்த வரிகளை வைத்து படப்பிடிப்பு நடந்து விட்டதாலும் மாற்று வரிகளைப் பயன்படுத்த முடியவில்லை என்றும் தாமரை தெரிவித்தார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....