Tuesday, April 30, 2024
மேலும்
    Homeசெய்திகள்புதுச்சேரிஇந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் நடை அடைப்பு...

    இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் நடை அடைப்பு…

    புதுச்சேரியில் சந்திர கிரகணத்தை ஒட்டி புகழ்பெற்ற புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் நடை காலை 11:30 மணிக்கு சாத்தப்பட்டது.

    நவம்பர் 8 ஆம் தேதி சந்திர கிரகணம் மதியம் 2.39 மணி முதல் இரவு 6.32 மணிவரை நிகழ உள்ளது. இதனால் புதுச்சேரியின் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் ஈஸ்வரன் கோவில் பெருமாள் கோவில் காமாச்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் காலை 11.30 மணிக்கு நடை சாத்தப்பட்டது.

    இதில் புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் காலை 11.25 மணி அளவில்கோயிலுக்குள் இருந்த பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு சாமி தரிசனத்திற்கு பின்னர் பக்தர்கள் வெளியேற்றப்பட்டு கோயில் கதவுகள் மூடப்பட்டன.

    மேலும் சுற்றுலா வந்தபக்தர்களை மாலை 7.30 மணிக்கு வருமாறு அறிவுறுத்தி கோயில் பாதுகாவலர்கள் அனுப்பிவைத்தனர். இதனை தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு புன்யாதானம் பூஜைகள் நடைபெற்று கோவில் நடை திறக்கப்படும் என்று கோவில் அறங்காவலர் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: இணையத்தை கலக்கி வரும் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ நியூ போஸ்டர்! ரசிகர்கள் மகிழ்ச்சி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....