Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்தெலுங்கிலும் கல்லா கட்டப்போகும் 'லவ்-டுடே'..வாழ்த்து தெரிவித்த விஜய் தேவரகொண்டா..

    தெலுங்கிலும் கல்லா கட்டப்போகும் ‘லவ்-டுடே’..வாழ்த்து தெரிவித்த விஜய் தேவரகொண்டா..

    தமிழில் கிடைக்கப்பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து, ‘லவ் டுடே’ திரைப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படவுள்ளது. 

    கோமாளி திரைப்பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்திலும், நடிப்பிலும் வெளிவந்த திரைப்படம்தான், லவ் டுடே. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த இத்திரைப்படம் இளைஞர்களிடையே சக்கை போடு போட்டு வருகிறது. பெருமளவு வசூல் வேட்டையையும் இத்திரைப்படம் நிகழ்த்தி வருகிறது. 

    லவ் டுடே திரைப்படத்தின் வெற்றி குறித்து , பல திரைப்பிரபலங்களும் தங்களது நேர்மறை கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் கூட பிரபல இயக்குநர் வசந்தபாலன் இது போன்ற திரைப்படங்களின் வெற்றி நம்பிக்கையைத் தருவதாக கூறியிருந்தார். 

    இந்நிலையில், தமிழில் மட்டுமே வெளியாகிய ‘லவ் டுடே’ திரைப்படம். தற்போது, தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. ஆம், தெலுங்கு மொழியில் டப் செய்யப்பட்டு லவ் டுடே என்ற பெயரிலேயே இம்மாத இறுதிக்குள் வெளியாகவுள்ளது. 

    இதனை முன்னிட்டு, தற்போது ‘லவ் டுடே’ திரைப்படத்தின் தெலுங்கு ட்ரைலரை, நடிகர் விஜய் தேவரகொண்டா வெளியிட்டுள்ளார். மேலும், ட்ரைலரை வெளியிடுவதில் மகிழ்ச்சி என்றும், படக்குழுவிற்கு அவரது வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்வதாக பதிவிட்டிருந்தார். தமிழில் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கும் ‘லவ்-டுடே’, தெலுங்கிலும் நல்ல வரவேற்பை பெறும் என்று சினிமா வட்டாரங்கள் நம்பிக்கைத் தெரிவிக்கின்றன. 

    மேலும், நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படத்தை தயாரித்துக்கொண்டிருக்கும் தயாரிப்பாளர் தில் ராஜூவின் நிறுவனம்தான் தெலுங்கில் ‘லவ்-டுடே’ திரைப்படத்தை வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க50 மில்லியனை கடந்த விஜய்யின் பாடல்; ஆர்ப்பரிக்கும் ரீல்ஸ்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....