Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ஆப்கானிஸ்தானில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான கால்நடைகள் பலி!

    ஆப்கானிஸ்தானில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான கால்நடைகள் பலி!

    ஆப்கானிஸ்தானில் கடந்த இரண்டு வாரங்களாக நிலவி வரும் மிகக் கடுமையான குளிருக்கு இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் பலியானதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    ஆப்கானிஸ்தானில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. இந்தக் குளிரால் ஆப்கன் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயிரிழப்புகளும் நேர்ந்த வண்ணம் உள்ளன. மனிதர்கள் மட்டுமல்லாது கால்நடைகளும் பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன. 

    சமீபத்தில் வெளிவந்த தகவலின்படி, ஆப்கானிஸ்தானின் 20 மாகாணங்களில் 2,60,000 கால்நடைகள் பலியாகி உள்ளன. மேலும், இவற்றில் 1,29,000 கால்நடைகள் ஆடுகள் ஆகும். பெருமளவில், ஆப்கானிஸ்தானின் வடக்கு மாகாணங்களான பால்க், ஜாவ்ஜான் மற்றும் பஞ்ச்ஷிர் ஆகிய பகுதிகளைச் சார்ந்த கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 

    மேலும், சில விவசாயிகள் குளிர்ந்த காலநிலை மற்றும் உணவுப் பொருள்கள் பற்றாக்குறையால் தங்கள் கால்நடைகளை கொன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

    இதைத்தொடர்ந்து, ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான்கள் மக்களுக்கு உதவும் வகையில் முடிவுகளை எடுக்க ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    விக்னேஷ் சிவனுக்கு ‘நோ’ சொன்னாரா அஜித்குமார்? – ஏகே 62 குறித்து வெளிவந்த தகவல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....