Monday, May 6, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்உள்ளாடையை ஏலம் விட முயன்ற பிரபல பாடகி!

    உள்ளாடையை ஏலம் விட முயன்ற பிரபல பாடகி!

    பிரபல அமெரிக்க ராப்-பாடகி பயன்படுத்திய உள்ளாடை பட்டியலிடப்பட்ட அரை மணி நேரத்திலேயே 75 லட்சத்துக்கு ஏலம் கேட்கப்பட்டது. 

    பிரபல அமெரிக்க ராப்-பாடகி, அலிஷா மைக்கேல் ஸ்டீபன். 24 வயதான இவர் பல நிகழ்ச்சிகளில் ஒரே மாதிரியான அதாவது சிறுத்தை புள்ளிகள் கொண்ட உள்ளாடைகளை அணிந்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பேசும் பொருளாகியது. ஒரே உள்ளாடையை ஏன் இவர் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்தனர். 

    இதற்கு அவரே தனது பாணியில், “ஐயோ, பேன்டி (உள்ளாடை) போலீசா” என நகைச்சுவையாக பதிலடி கொடுத்திருந்தார். இந்நிலையில், இவர் தனது உள்ளாடைகளை விற்பனை செய்ய இருப்பதாகவும், தன்னிடம் சிறுத்தை புள்ளிகள் கொண்ட உள்ளாடைகள் அதிகம் இருப்பதாகவும், ஒரு ஜோடி உள்ளாடைகளை இன்று பயன்படுத்தி மறுநாள் விற்க இருப்பதாகவும் சமூக வலைதளப்பக்கங்களில் தெரிவித்திருந்தார். 

    தொடர்ந்து இவர், இபே ஒரு ஜோடி உள்ளாடைகளை விற்பனையில் பட்டியலிட்டார். இதையடுத்து பட்டியலிடப்பட்ட அரைமணி நேரத்தில்  90 ஆயிரத்து 800 அமெரிக்க டாலர்கள் அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் 75 லட்சத்துக்கு ஏலம் கேட்கப்பட்டது. 

    இதனைத்தொடர்ந்து, சில நிமிடங்களில் இபே நிறுவனம் பட்டியலிடப்பட்ட உள்ளாடையை நீக்கிவிட்டது. பயன்படுத்திய உள்ளாடைகள், காலுறைகள் ஆகியவற்றை விற்க அனுமதி இல்லை என்றும், அவை சுத்தமாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படாது. மேலும், இபேயில் பிராக்கள் உள்ளாடையாக கருதப்படவில்லை; ஆரோக்கியமும் சுகாதாரமும் தான் முக்கியமானது என இபே நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.  

    தஞ்சாவூரில் திருவள்ளுவருக்கு கோயில்; மேளதாளம் முழங்க பிரதிஷ்டை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....