Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்அடுத்தடுத்து வீடியோக்களை ரிலீஸ் செய்த வாரிசு படக்குழு; இப்போது 'ரஞ்சிதமே'

    அடுத்தடுத்து வீடியோக்களை ரிலீஸ் செய்த வாரிசு படக்குழு; இப்போது ‘ரஞ்சிதமே’

    நடிகர் விஜய்யின் வாரிசு படத்தில் இடம்பெற்ற ‘ரஞ்சிதமே’ பாடலின் வீடியோ தற்போது யூடியூப் தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. 

    இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து கடந்த ஜனவரி 11-ஆம் தேதி வெளிவந்த திரைப்படம்தான், வாரிசு. தில் ராஜூ தயாரித்திருந்த இத்திரைப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான வாரிசு கலவையான விமர்சனங்களையே சந்தித்தது.

    இருப்பினும், வாரிசு திரைப்படத்தின் வசூல் துளியும் பாதிக்கப்படவில்லை என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, வாரிசு திரைப்படம் ரீலிஸாகி 11 நாளில் உலகம் முழுவதும் 250 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது 300 கோடி வசூலை வாரிசு திரைப்படம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. 

    இத்திரைப்படத்தில், நடிகர் விஜய் மற்றும் மானசி பாடிய ‘ரஞ்சிதமே’ பாடல் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. மேலும், இப்பாட்டில் விஜய் மற்றும் ராஷ்மிகாவின் நடனம் திரையரங்குகளில் பலரையும் நடனம் ஆட வைத்தது. இந்நிலையில், ‘ரஞ்சிதமே’ பாடலின் வீடியோ தற்போது யூடியூப் தளத்தில் வெளிவந்துள்ளது. 

    முன்னதாக, வாரிசு படத்தில் இடம்பெற்ற ‘தீ தளபதி’, ‘அம்மா பாடல்’, ‘செலிப்ரேஷன் ஆஃப் வாரிசு’ போன்ற பாடல்கள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது. 

    இரட்டை இலை சின்னம் வெற்றியடைய வேண்டும்; வாபஸ் பெற்ற ஓபிஎஸ் ஆதரவு வேட்பாளர்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....