Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா8 மாநிலங்களுக்குப் பரவிய தோல் கழலை நோய்

    8 மாநிலங்களுக்குப் பரவிய தோல் கழலை நோய்

    தோல் கழலை நோய் எனப்படும் லம்பி தோல் நோய் இந்தியாவில் 8 மாநிலங்களுக்கு பரவியுள்ளது.

    குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், அந்தமான் நிக்கோபார் உள்ளிட்ட 8 மாநிலங்களில் தோல் கழலை நோய் எனப்படும் தோற்று பரவியுள்ளது. இந்த நோய்த்தொற்று கால்நடைகளை, குறிப்பாக மாடுகளை அதிகம் தாக்குகிறது.

    ஜூலை மாத இறுதியில் பரவிய இந்த நோயால் இதுவரை, 7,300 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

    கொசுக்கள் மற்றும் ஈக்கள் மூலம் பரவும் தோல் கழலை நோய் எனப்படும் இந்த நோய், லம்பி தோல் நோய் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த நோயானது, போக்ஸ்விரிடே எனப்படும் குடும்பத்தைச் சேர்ந்த வைரசால் ஏற்படுகிறது. 

    இந்த நோய் தாக்கப்பட்ட கால்நடைகளுக்கு முதலில் காய்ச்சலும், பின்னர் தோலின் மேற்புறத்தில் சிறு சிறு கட்டிகளும் உருவாகும். பாதிக்கப்பட்ட கால்நடைகளின் கால்களின் வீக்கம் உண்டாகி, அவைகள் நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்படும்.

    மேலும், கால்நடைகளின் தோலானது, இந்த நோயால் நிரந்தரமாக சேதமடைவதால், அவற்றின் வணிக மதிப்பு குறைந்து போகிறது. இது மட்டுமின்றி, பால் உற்பத்தி குறைதல், வளர்ச்சி குறைதல் போன்றவற்றுக்கு இந்த நோய் காரணமாகிறது. சரியான சிகிச்சை அளிக்காவிட்டால் மரணமும் ஏற்படுகிறது.

    இந்த நோய் குறித்து பேசிய கால்நடை பராமரிப்புத்துறை உயர் அதிகாரி கூறியதாவது, நாடு முழுவதும் இதுவரை 1.85 லட்சம் கால்நடைகள் தோல் கழலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் 7,300 கால்நடைகள் உயிரிழந்துள்ளது. அதிகபட்சமாக பஞ்சாபில் 3,359 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. உயிரிழப்பு விகிதம் 1 முதல் 2 சதவீதம் வரை உள்ளது.

    இந்த நோய் வேகமாகப் பரவி வருவதால், கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    இதுவரை நாடு முழுவதும் 17.92 கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி நோய் பாதித்த கால் நடைகளை தனிமைப் படுத்தவும், உயிரிழந்த கால்நடைகளை பாதுகாப்பாக அடக்கம் செய்யவது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் அமல்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும், இந்த நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு உதவவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாநில அரசுகள் இலவச தொலைபேசி கட்டுபாட்டு மையங்களை நிறுவி உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....