Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு 19 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற சிறுவாபுரி முருகன் திருக்கோயில் குடமுழுக்கு திருவிழா!

     19 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற சிறுவாபுரி முருகன் திருக்கோயில் குடமுழுக்கு திருவிழா!

    சிறுவாபுரி முருகன் திருக்கோயில் குடமுழுக்கு 19 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று (ஆகஸ்ட் 21) வெகு விமரிசையாக நடைபெற்றது.

    சிறுவாபுரி முருகன் திருக்கோயிலில் 19 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற  குடமுழுக்கு காரணமாக, சிறுவாபுரி நகரமே விழாக் கோலத்தில் காட்சியளித்தது. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த சின்னம்பேடு சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும்.

    இக்கோயிலுக்கு தொடர்ந்து ஆறு வாரங்கள் வந்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம். கடந்த 2003-ம் ஆண்டு இந்த கோயிலில் குடமுழுக்கு நடைபெற்றது. இந்நிலையில், தற்போது இந்தக் கோயிலை தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் 1 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    கடந்த ஓரண்டாக இத்திருக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்றன. மூலவர் சன்னதி, அண்ணாமலையார் சன்னதி, விநாயகர் சன்னதி மற்றும் பரிவார சன்னதிகள், ராஜகோபுரம் ஆகியவை புதுப்பிக்கப்பட்டன. மதிற்சுவர் சீரமைத்தல், கருங்கல் தரைதளம் அமைத்தல், பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்வசதி ஏற்படுத்துதல், கழிவறை சீரமைத்தல் என ஆலயத்தின் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்றன. murugan koil

    19 ஆண்டுகளுக்கு பின்னர், இந்த கோயிலில் நேற்று (ஆகஸ்ட் 21) குடமுழுக்கு விழா நடைபெற்றது. கடந்த புதன் கிழமை யாக சால பூஜைகளுடன் குடமுழுக்கு விழா தொடங்கியது. நாள்தோறும் முருகனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதில், பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பாலசுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு சென்றனர். மேலும், பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    மேலும், குடமுழுக்கு விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அதிகாரிகள், அரசியல் கட்சி தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

    கௌதம புத்தர் மற்றும் புத்த மத வரலாறு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.

    Most Popular