Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசிதம்பரத்தின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    சிதம்பரத்தின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    கொள்ளிடம் ஆற்றில் நீர் திறக்கப்பட்டுள்ளதால் நேற்று (ஜூலை 20) சிதம்பரத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பொதுப்பணித்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. 

    கர்நாடக மாநிலத்தில் கடந்த சில வாரங்களாகவே பெய்து வரும் கனமழை காரணமாக, அந்த மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தவுடன், அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

    மேட்டூர் அணையில் உபரிநீர் திறக்கப்பட்டதை அடுத்து, கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

    முன்னதாக, ஜூலை 19 அன்று சிதம்பரத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பொதுப்பணித்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், நேற்றும் (ஜூலை 20) வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்தது

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....