Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாசித்ரா ராமகிருஷ்ணாவை விசாரிக்க 4 நாள்கள் அமலாக்கத்துறை காவல்

    சித்ரா ராமகிருஷ்ணாவை விசாரிக்க 4 நாள்கள் அமலாக்கத்துறை காவல்

    தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணனை அமலாக்க துறை கடந்த 14-ம் தேதி கைது செய்தது. 

    பங்குச் சந்தை வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் கோ-லொக்கேஷன் வசதியை என்எஸ்இ 2010-ல் அறிமுகப்படுத்தியது. ஆனால், இந்த வசதியை முறைகேடாக பயன்படுத்தி குறிப்பிட்ட சில பங்குச் சந்தை புரோக்கிங் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டதாக என்எஸ்இ மீது 2015-ல் குற்றம் சாட்டப்பட்டது.

    இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது, 2013 முதல் 2016 வரையில் என்எஸ்இயின் நிர்வாக இயக்குநராக இருந்த சித்ரா ராமகிருஷ்ணா, இமயமலை யோகி ஒருவரின் ஆலோசனையின்படியே நிறுவனம் தொடர்பான அனைத்து நிர்வாக முடிவுகளையும் எடுத்து வந்திருக்கிறார் என்பது தெரியவந்தது.

    இமயமலை யோகியின் அறிவுறுத்தலின்படியே, பங்குச் சந்தை நிர்வாகம் தொடர்பாக முன்னனுபவம் இல்லாத ஆனந்த் சுப்ரமணியனை அதிக ஊதியத்துக்கு சித்ரா ராமகிருஷ்ணா பணிக்கு அமர்த்தினார்.

    இதனை தொடர்ந்து, கடந்த பிப்ரவரியில் ஆனந்த் சுப்ரமணியனையும், மார்ச் முதல் வாரத்தில் சித்ரா ராமகிருஷ்ணனையும் சிபிஐ கைது செய்தது.

    இந்நிலையில், என்.எஸ்.இ அதிகாரிகளின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்டதாக சித்ரா ராமகிருஷ்ணன், மும்பை முன்னாள் காவல்துறை ஆணையர் சஞ்சய் பாண்டே மற்றும் என்.எஸ்.இ முன்னாள் தலைமை அதிகாரி ரவி நரேன் ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. 

    இதற்கிடையே, என்எஸ்இ ஊழியர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்ட விவகாரத்தில், என்எஸ்இ முன்னாள் இயக்குநர் சித்ரா ராம்கிருஷ்ணன், ரவி நரேன், மும்பை போலீஸ் முன்னாள் ஆணையர் சஞ்சய் பாண்டே ஆகியோர் மீது சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கையும் அமலாக்கப்பிரிவு புதிதாக பதிவு செய்துள்ளது.

    தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்பு மற்றும் சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கு ஆகியவை தொடர்பாக சித்ரா ராமகிருஷ்ணனை கடந்த 14-ம் தேதி அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இதைத்தொடர்ந்து சித்ரா ராமகிருஷ்ணனை தில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. 

    அப்போது, சித்ரா ராமகிருஷ்ணனை விசாரணை காவலில் எடுக்க அமலாக்கத்துறை அனுமதி கோரியது. இதையடுத்து, 4 நாட்கள் அவரை விசாரணைக்கு அழைத்து செல்ல சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

    ஜிஎஸ்டி பெயரில் மக்களுடன் விளையாடும் நிர்மலா சீதாராமன்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....