Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுகுல்தீப் சுழலில் சிக்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்; முயன்ற ஷ்ரேயாஸ் ஐயர்!

    குல்தீப் சுழலில் சிக்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்; முயன்ற ஷ்ரேயாஸ் ஐயர்!

    டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற நேற்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி வெற்றிப் பெற்றது. இப்போட்டியானது, மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நேற்று இரவு 7:30 மணிக்குத் தொடங்கியது.

    முதலில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணியானது பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனால், கொல்கத்தா அணியானது பேட்டிங்கில் களம் கண்டது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஃபின்ச் மற்றும் வெங்கடேஷ் ஐயர் இருவருமே தங்களது விக்கெட்டுகளை விரைவில் பறிகொடுத்தனர். 

    கொல்கத்தாவின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் நிலைத்து விளையாடி, 37 பந்துகளுக்கு 42 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரில் முக்கிய பங்கு வகித்தார். இவரைத்தவிர, நிதிஷ் ராணா அட்டகாசமாக விளையாடி 34 பந்துகளில் அரைசதத்தைக் கடந்தார். இவர்களின் இந்த ஆட்டத்தினால்தான் இருபது ஓவர் முடிவில் கொல்கத்தா அணியானது 146 ரன்களை எடுத்தது. 

    பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஸல் டக்-அவுட் ஆகி அனைவரையும் அதிரச்செய்தார். பேட்ஸ்மேன்கள் பெரிதும் சோபிக்கத் தவறியதுதான, கொல்கத்தா அணி 146 எனும் குறைவான ரன்களை எடுக்க காரணமாயிற்று.

    டெல்லி அணி சார்பில் மூன்று ஓவர்களை மட்டுமே வீசி 14 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார், குல்தீப் யாதவ். 

    டெல்லி கேபிடல்ஸ் 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கியது. ஆனால், ஆரம்பத்திலேயே டெல்லி அணியின் முக்கிய வீரரான ப்ரித்வி ஷா ரன்கள் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பி டெல்லி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்தார். வார்னர் 26 பந்துகளுக்கு 42 ரன்கள் அடித்து மாஸ் காட்டினார். 

    வார்னரின் விக்கெட்டிற்கு பிறகு, டெல்லி அணி அவ்வபோது விக்கெட்டுகளை இழந்து வந்தன. ஆனால், இலக்கு குறைவானது என்பதாலும், லிலீத் யாதவ், ரோவ்மேன் பாவெல், அக்‌ஷர் படேல் ஆகியோர் முறையே 22,33,24 ரனகளை அடிக்க 19 ஓவரிலேயே டெல்லி அணியானது இலக்கை எட்டி வெற்றிப் பெற்றது.

    ஆட்டநாயகன் விருது தனது பந்துவீச்சால் கலக்கிய குல்தீப் யாதவிற்கு வழங்கப்பட்டது. 

    காத்து வாக்குல ரெண்டு காதல் எப்படி இருக்கு? பொது மக்கள் மற்றும் ரசிகர்களின் பார்வை இதோ!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....