Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையில் போக்குவரத்து மாற்றம்; போக்குவரத்து துறையின் புதிய வியூகம் கைகொடுக்குமா?

    சென்னையில் போக்குவரத்து மாற்றம்; போக்குவரத்து துறையின் புதிய வியூகம் கைகொடுக்குமா?

    தமிழகத்தின் தலைநகரான சிங்காரச் சென்னையில், போக்குவரத்து நெரிசல் இன்றும் தீராத பிரச்சினையாகவே உள்ளது. சென்னையில் பேருந்து, மெட்ரோ இரயில், மின்சாரப் போக்குவரத்து என பல்வேறு பொதுப் போக்குவரத்துகள் இருந்தாலும், தனிநபர் வாகனப் போக்குவரத்து மட்டும் குறைந்தபாடில்லை.

    போக்குவரத்து துறை பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தும், நெரிசலைக் குறைக்க முடியாமல் திணறுகிறது. ஆகையால், அடுத்த 10 நாட்களுக்கு சோதனை முறையில், சென்னையில் உள்ள நந்தனம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, போக்குவரத்து காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    போக்குவரத்து மாற்றம் குறித்து, சென்னை காவல்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வெங்கட்நாராயணா சாலையில் இருந்து, சேமியர்ஸ் சாலைக்குச் செல்லக் கூடிய வாகனங்கள், அண்ணாசாலை மற்றும் வெங்கட்நாராயணா சாலை சிக்னல் சந்திப்பில் இடது பக்கமாக சென்று, அங்கிருக்கும் டொயோட்டா ஷோரூம் முன்பாக ‘யு டர்ன்’ எடுத்து திரும்பிச் செல்ல வேண்டும்.

    செனடாப் சாலையில் இருந்து தேனாம்பேட்டைக்குச் செல்லக் கூடிய வாகனங்கள், அண்ணா சாலை மற்றும் செனடாப் சாலை சிக்னலில் இடது பக்கமாக திரும்பி, சைதாப்பேட்டையை நோக்கி, சுமார் 200 மீட்டர் தூரம் வரை சென்று, டொயோட்டா ஷோரூம் முன்பாக ‘யு டர்ன்’ எடுத்தச் செல்ல வேண்டும்.

    பாரதிதாசன் சாலையில் இருந்து, தேனாம்பேட்டை செல்லக் கூடிய வாகனங்கள், அண்ணா சாலை மற்றும் பாரதிதாசன் சாலை சிக்னல் இடது பக்கமாக சென்று, சைதாப்பேட்டையை நோக்கி நேராக, சுமார் 300 மீட்டர் தூரம் வரை சென்று, டொயோட்டா ஷோரூம் முன்பாக ‘யு டர்ன்’ எடுத்துச் செல்ல வேண்டும் என்று, சென்னை காவல்துறைத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வேண்டியே, இந்த நடவடிக்கை சோதனை அடிப்படையில் எடுக்கப்படுவதாகவும், இதற்கு வாகன ஒட்டிகள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இந்த சோதனை முறை போக்குவரத்து மாற்றம் குறித்த ஆலோசனைகள் மற்றும் பிரச்சினைகளை, வாகன ஒட்டிகள் dcpsouth.traffic@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பலாம் என்றும் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

    குல்தீப் சுழலில் சிக்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்; முயன்ற ஷ்ரேயாஸ் ஐயர்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....