Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்உதயநிதி ஸ்டாலின் நிகழ்த்திய முக்கிய மாற்றம்! - அமைச்சர் பதவிக்கான முன்னெடுப்பா?

    உதயநிதி ஸ்டாலின் நிகழ்த்திய முக்கிய மாற்றம்! – அமைச்சர் பதவிக்கான முன்னெடுப்பா?

    திமுக-வின் இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், திரைப்படங்கள் மூலமாக தமிழக மக்களுக்கு அறிமுகமானவர்.

    எம்எல்ஏ ஆன பிறகு, முழு நேர அரசியலில் இவர் இறங்கியுள்ளார். மேலும், சட்டப்பேரவைக் கூட்டங்களிலும், அரசு நிகழ்ச்சிகளிலும் தவறாது கலந்து கொள்கிறார். திமுக ஆட்சி அமைத்த போது, உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக, செய்தி வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், அமைச்சர் பதவி அவருக்கு கிடைக்கவில்லை.

    கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றியடைந்து, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய நேரத்தில், அமைச்சரவைப் பட்டியலில் உதயநிதி ஸ்டாலினின் பெயர் நிச்சயமாக இடம் பிடித்திருக்கும் என்றே அனைவரும் எதிர்ப்பார்ப்போடு காத்திருந்தனர். ஆனால், அவரின் பெயர் அமைச்சரவைப் பட்டியலில் இடம் பெறாமல் போனது, அவருடைய ஆதரவாளர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

    அமைச்சர்களான கே.என்.நேரு, செந்தில் பாலாஜி மற்றும் சேகர் பாபு போன்றவர்கள், அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின், இடம்பெற வேண்டும் என்று தங்களின் ஆசையை மிகவும் வெளிப்படையாகவே தெரிவித்தனர்.

    இருப்பினும், அமைச்சர்களின் விருப்பம் குறித்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் உடைய காரில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றமானது, அவருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    சில தினங்களுக்கு முன்பு, சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்ததும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தவறுதலாக உதயநிதியின் காரில் ஏற முயன்றார். அதைப் பார்த்த பாதுகாப்பு அதிகாரி, இது உங்களுடைய கார் இல்லை என சொன்னதும், உடனே தனது காரை நோக்கி நகர்ந்தார். இருவருடைய காரும் ஒரே மாதிரியாக இருப்பதால், இந்த குழப்பம் ஏற்பட்டது என அண்மையில் செய்திகள் ஒளிபரப்பாயின.

    திமுக ஆட்சி அமைத்து, ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில், அமைச்சரவையில் மாற்றம் நிகழுமா என்று கேள்வி எழுந்துள்ளது. அப்படி அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டால், அதில் உதயநிதிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது தான், தற்போது அனைவருடைய எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

    இந்நிலையில், உதயநிதி தனது காரின் முன்பகுதியில் செய்துள்ள மாற்றங்கள், அவர் அமைச்சர் ஆக வாய்ப்பு இருக்கும் என்ற யூகத்தை கிளப்பி விட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் காரில் பொருத்தப்பட்டுள்ள எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் அமைப்புகள், அமைச்சர்கள் உடைய கார்களில் உள்ள இலச்சினைப் (logo) பொருத்துவதற்கானது. அதைப் போலவே, உதயநிதியின் காரில் அமைக்கப்பட்டுள்ளதால், அமைச்சர் பதவிக்கு உதயநிதி தயாராக இருக்கிறார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    பரபரவென இருந்த இறுதி ஓவர்; இதுதான் ‘த்ரில்லங்’ என ரசிகர்களை உணரவைத்த நிகழ்வு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....