Wednesday, March 27, 2024
மேலும்
    Homeசெய்திகள்பேராசிரியர் செய்ற வேலையா இது? இளம் பெண்ணிடம் சில்மிஷம் செய்து அடி உதை..! போலீஸ் காட்டிய...

    பேராசிரியர் செய்ற வேலையா இது? இளம் பெண்ணிடம் சில்மிஷம் செய்து அடி உதை..! போலீஸ் காட்டிய அதிரடி

    சாலையில் சென்று கொண்டிருந்த பெண்ணை, இரு சக்கர வாகனத்தில் சென்று தள்ளிவிட்டு, அந்த பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்ட உதவி பேராசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    சென்னை மடிப்பாக்கம் ராம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் 40 வயது மதிக்கத்தக்க பெண். இவர் கடந்த மாதம் 23ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் தனது தோழி வீட்டிற்கு சென்றுவிட்டு, தனது வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார்.

    அச்சமயம் பார்த்து, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர் அப்பெண்ணை பின்தொடர்ந்து வந்ததோடு, இருசக்கர வாகனத்தோடு சேர்த்து அப்பெண்ணை இடித்து கீழே தள்ளிவிட்டுள்ளார்.கீழே விழுந்து தட்டுத்தடுமாறி எழுந்தப் அந்த பெண்ணுக்கு உதவி செய்வது போல் நடித்து ,அந்த மர்ம நபர் ஆபாசமாக நடந்து கொண்டார்.

    உடனே ஆத்திரமடைந்து அந்தப் பெண் தாக்க்கியபோது, பதிலுக்கு அந்த நபர் ஆவேசமாக அந்தப் பெண்ணை இரும்பு கேட்டில் தலையை பிடித்து கீழே தள்ளி தாக்கிவிட்டு, தொடர்ந்து அவரை பயங்கரமாக அடிக்கவும் செய்துள்ளார்.பிறகு அங்கிருந்து தப்பியோடிய அந்த மர்ம நபர் மீது ,பாதிக்கப்பட்ட பெண் மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    அவர் அளித்த புகாரின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு அந்த மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்துள்ளனர்.
    குறிப்பாக இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளின் உதவியோடு வாகன பதிவெண்ணை கண்டுபிடித்து, அவரது முகவரியை கண்டறிந்து, வேளச்சேரி டான்சி நகரில் அவரது வீட்டிற்கு சென்று காவல்துறை, அந்த மர்ம நபரை கைது செய்தது.

    தொடர்ந்து காவல்துறையினர் அவருடைய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இவர் மீது பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பெயர் தமிழ்ச்செல்வன் என்பதும், குன்றத்தூர் மாதா பொரியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது. மேலும், கடந்த 2018 ஆம் ஆண்டு அவருக்கு திருமணம் ஆகி 2020 ஆம் ஆண்டு விவாகரத்தும் நடந்துள்ளது.

    இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைதான உதவி பேராசிரியர் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதையும் படிங்க6 பேர் விடுதலை: 30 ஆண்டுகால போராட்டத்திற்கும்., மனித உரிமைக்கும் கிடைத்த வெற்றி..! மு க ஸ்டாலின்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....