Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமாணவிகளுக்கும் மகப்பேறு விடுப்பு, மாதவிடாய் விடுப்பு - கேரளத்தில் அசத்தல்!

    மாணவிகளுக்கும் மகப்பேறு விடுப்பு, மாதவிடாய் விடுப்பு – கேரளத்தில் அசத்தல்!

    18 வயதுக்கு மேற்பட்ட மாணவிகளுக்கு 60 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்து அறிவித்துள்ளார்.

    கேரள மாநிலத்தில் உயர்கல்வி பயிலும் 18 வயதுக்கு மேற்பட்ட மாணவிகள் அதிகபட்சமாக 60 நாட்கள் வரை மகப்பேறு விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என அம்மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்து தெரிவித்துள்ளார். 

    அனைத்து மாநில பல்கலைக்கழகங்களிலும் இந்த மாதவிடாய் விடுப்பு வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் கேரள மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்து தெரிவித்துள்ளார். 

    மேலும் மாதவிடாய் காலங்களில் மாணவிகள் எதிர்கொண்டு வரும் மன மற்றும் உடல் ரீதியான சிரமங்களைக் கருத்தில் கொண்டு, கேரள அரசு மாநில உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். 

    அதேபோல், மாதவிடாய் காலத்தில் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். இதன் காரணமாக கல்லூரிகளில் கட்டாய வருகைப்பதிவு மாணவிகளுக்கு மட்டும் 75 சதவீதலிருந்து 73 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. 

    விபத்துக்குள்ளான விஜய் ஆண்டனிக்கு பிளாஸ்டிக் சர்ஜரி?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....