Sunday, May 5, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகேதார்நாத் கோயில் திறக்கப்படும் தேதி அறிவிப்பு

    கேதார்நாத் கோயில் திறக்கப்படும் தேதி அறிவிப்பு

    இமயமலையில் இருக்கும் கேதார்நாத் கோயில் இந்தாண்டு ஏப்ரல் 25 ஆம் தேதி திறக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான கேதார்நாத் கோயில் குளிர்காலத்தை முன்னிட்டு, கிட்டத்தட்ட 6 மாதங்களாக நடை மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் 6 மாதங்களுக்கு பிறகு, ஏப்ரல் 25 ஆம் தேதி நடை மீண்டும் திறக்கப்படும் என பத்ரிநாத்-கேதார்நாத் கோயிலின் சமிதி அறிவித்துள்ளது. 

    இந்நிலையில் மகாசிவராத்திரியை முன்னிட்டு உகிமத்தில் உள்ள ஓம்காரேஷ்வர் கோயிலின் நடை இன்று திறக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இந்த வழிபாட்டில் அதிகாரிகள், மாவட்ட நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

    குளிர் காலத்தில் வழிபாடு செய்யப்படும் உகிமத்தில் ஓம்காரேஷ்வர் கோயிலுக்கு கேதார்நாத் மூடப்பட்ட பிறகு, ஒவ்வொரு ஆண்டும் சிவபெருமானின் சிலை கீழே கொண்டு வரப்படுவது வழக்கம். 

    இந்நிலையில் பத்ரிநாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோயில்கள் ஏப்ரல் 22 மற்றும் ஏப்ரல் 27 ஆகிய தேதிகளில் திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது. 

    கேதார்நாத் உள்ளிட்ட சார் தாம் கோயில்கள் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் கடும் குளிர் காரணமாக பொதுமக்களின் நலன் கருதி மூடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

    பட்டியலின மக்களை அவதூறாக பேசியதாக சீமான் மீது காவல்துறையில் புகார்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....