Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்நேஷனல் ஜியாகிராபியின் சிறந்த புகைப்படமாக இந்தியர் புகைப்படம் தேர்வு..

    நேஷனல் ஜியாகிராபியின் சிறந்த புகைப்படமாக இந்தியர் புகைப்படம் தேர்வு..

    பிரபல ஊடகமான நேஷனல் ஜியாகிராபியின் சிறந்த புகைப்படத்துக்கான விருதை இந்தியாவை பின்புலமாகக் கொண்ட கார்த்திக் சுப்ரமணியம் வென்றார். 

    நேஷனல் ஜியாகிராபிக் சார்பில் ஆண்டுதோறும் புகைப்பட போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் போட்டிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான புகைப்பட கலைஞர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றன. எந்த புகைப்படம் வெற்றி வாகை சூடும் என பல புகைப்பட ஆர்வலர்கள் காத்திருந்தனர். 

    இந்நிலையில், சமீபத்தில் நேஷனல் ஜியாகிராபிக் சிறந்த புகைப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆண்டின் சிறந்த புகைப்படம் போட்டியில் கார்த்திக் சுப்ரமணியம் என்பவர் எடுத்த ’வெண்டலைக் கழுகுகளின் நடனம்’ புகைப்படம் விருது பெற்றிருக்கிறது.

    இந்திய பின்புலத்தை கொண்ட கார்த்திக், அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். சான்பிரான்சிஸ்கோவில் வசித்து வரும் இவர் அலாஸ்காவின் கழுகுகள் சரணாலயத்தில் இப்புகைப்படத்தை எடுத்துள்ளார். இந்த புகைப்படம் நேஷனல் ஜியோகிராபிக் இதழில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

    மேலும், வெண்டலைக் கழுகுகளின் (Bald eagle) தலை வெள்ளை நிறத்திலும், அதன் வளைந்த அலகுகள் மஞ்சள் நிறத்திலும், உடல் கரும்பழுப்பு நிறத்திலும் காணப்படும். இந்த கழுகுகள் அமெரிக்காவின் தேசியப் பறவையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

    சன் ரைசர்ஸ் அறிவிச்சிட்டாங்க.. ஆனா தில்லி அணி?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....